29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
170292031
ஆரோக்கிய உணவு

இதோ எளிய நிவாரணம்! பல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி!

கண்டங்கத்திரி ெசடி வகையைச் சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு. கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது. இதன் செடி முழுவதும் முட்கள் இருக்கும்.
இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணமுடையவை.

* பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

* கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டது.

* கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர நீங்கும்.

* பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.

* வரட்டு இருமலுக்கு கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம். சீரகம் 5 கிராம். கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடிக்க சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களும் நீங்கும்.

* இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை நாற்றம் அகலும்.170292031

* காலில் ஏற்படும் வெடிப்புக்கு இலையை இடித்து சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர வெடிப்பு மறையும்.

* உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் பாதையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகும். கண்டங்கத்திரி இலையை அம்மியில் வைத்து நைத்து சாறு எடுத்து, அதில் ஒன்னரைத் தேக்கரண்டிஅளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு நீங்கும்.

* சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும்.

* கண்டங்கத்திரி வேர், ஆடு தொடா வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான காய்ச்சல் காணாமல் போகும்.

* கண்டங்கத்திரி பழத்தை மண் பாண்டத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து குழம்பு பதமாக இருக்கும் போது ஒரு பங்கு நல்லெண்ணெய் கூட்டி மெழுகு பதம் வர காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த கலவையை வெண் குஷ்டத்திற்கு தடவி வர குணமாகும்.

Related posts

உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா தயிர் வடை

nathan

ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல்

nathan

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா? அப்ப உடனே இத படிங்க…

nathan

சூப்பரா பலன் தரும்!!மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நன்னாரி வேரின் பயன்கள்…!!

nathan

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan