23.8 C
Chennai
Wednesday, Dec 25, 2024
hihiu
ஆரோக்கியம் குறிப்புகள்

முயன்று பாருங்கள் உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்

உலர் பழங்களில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இதனால் உலர் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதனால் குறைவதற்கு பதில், உடல் எடை மிகுதியாக அதிகரித்து விடும். எனவே அதிக அளவிலான உலர் பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உலர் பழங்களின் உதவியால் உடல் எடையை குறைப்பதற்கு, தினசரி உணவில் ஒரு சிறு கிண்ணம் அளவு மட்டும் உலர் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதற்கும், சத்துகளை பெறுவதற்கும் ஒரு கிண்ணம் போதுமானது.

பிஸ்தா பருப்பு
பிஸ்தா பருப்பு என்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்பு நிறைய நல்ல கொழுப்புசத்து, நார்ச்சத்து, புரதச்சத்துகளை கொண்டுள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள கொழுப்பு சத்துக்கள் அனைத்தையும் நமது உடல் உறிஞ்சாது. அது குறைவான கலோரிகள் உள்ள உணவை உருவாக்குகிறது. எனவே ஒரு நல்ல டயடிற்கு தேவையான சிறந்த டிப்ஸ் என்னவென்றால், உலர் பழங்களில் இந்த பிஸ்தா பருப்பை அதிகமாக டயட்டில் பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் உடல் எடை நன்கு குறையும். அதிகமான பிஸ்தா பருப்பை எடுத்துக் கொண்டால், அதிகமாக எடை குறையும். உடல் எடையை குறைப்பதற்கான டயட்டில், இந்த பிஸ்தா பருப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பசி உணர்வு
உலர் பழங்களில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது. ஒரு கிண்ணம் நிறைய உலர் பழங்களை எடுத்துக் கொண்டால் அது பசியை போக்க பயன்படுகிறது. குறைவான பசி, பிற உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ள உதவுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளான சிப்ஸ், பால் ஆடை கட்டி, ஜங்க் புட்ஸ் போன்றவைகளுக்கு பதிலாக சிறந்த உணவான உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். தேவையான அளவு உணவுகளை மட்டும் உட்கொள்ள இடமளிக்கிறது உலர் பழங்கள். தேவையான அளவு உலர் பழங்களை சாப்பிடுவது, மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும்.
hihiu
பிற நன்மைகள்
உலர் பழங்கள் உடல் எடையை குறைப்பதை தவிர, வேறு சில நன்மைகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக பாதாம், அறிவு கூர்மையை ஏற்படுத்தி மன வளர்ச்சியை அதிகரிக்கிறது. உலர் அத்திப் பழங்கள் உடல் சோர்வுக்கும், சர்க்கரை நோய்க்கும் மற்றும் இரத்த ஓட்டத்திற்கும் நல்லது. குங்கிலியம் தோலிற்கும், உடல் செயற்பாட்டிற்கும் நல்லது. இது உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடலாம். முந்திரிப்பருப்புகள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் அது அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் கொண்டுள்ளது. முந்திரிப்பருப்பை இந்த எடை குறைக்கும் டயட்டில் இருந்து எடுப்பது நல்லது.

Related posts

வைட்டமின் சி தரும் ஆரோக்கிய நலன்

nathan

மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு தீர்வு!….

nathan

நோய்களை குறைக்கும் நிம்மதியான உறக்கம்

nathan

ஜாக்கிரத ! இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கு மோசமான கனவுகளை ஏற்படுத்துமாம்…

nathan

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

nathan

நீங்க நல்ல பெஸ்ட் ஹஸ்பெண்ட்டா? 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா?

nathan

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை இதனை சாப்பிட்டு பாருங்கள்..!

nathan

இந்த 5 ராசிக்காரங்க திருமண வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவாங்களாம்…

nathan

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan