25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
gffjjggh
ஆரோக்கிய உணவு

இதோ எளிய நிவாரணம்…வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கொலஸ்ட்ரால் குறையும்
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.

2. உடல் சூடு குறையும்
உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.

3. இதய நோய்
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

4. நீரிழிவு
வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

5. மலச்சிக்கல்
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
gffjjggh
6. செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

7. எடை குறையும்
வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

8. மார்பகத்தை பெரிதாக்க
நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.

9. சிறுநீரகம்
சிறுநீரக கற்கள் இருந்து, அதனால் கடுமையான வலியை சந்தித்து வந்தால், சிறுநீரகத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.

10. இரத்த ஓட்டம் மேம்படும்
வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ரத்தச் சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் கருப்பு களி….

nathan

விழிப்புணர்வு தகவல்! உணவில் அஜினமோட்டோ சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அன்றாட உணவில் பீன்ஸை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!

nathan

உங்களுக்கு இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரு கையளவு வேர்கடலை போதும்…! இதய நோய் உங்களை கண்டாலே அலண்டு ஓடி விடும்?

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

உங்களுக்கு தெரியுமா பல நோய்களை குணப்படுத்தும் முருங்கை விதைகள்..!

nathan

தொடர்ந்து அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன…!!

nathan