26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா?.. பக்க விளைவுகள் ஏற்படும்..!

பாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி மாதவிடாய் காலங்களில் உறவு கொள்வதால் எந்த பயனும் இல்லை என்கின்றனர். இதனால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் அதீத வலியும், ஆண்களுக்கு திருப்தி இன்மையும் மட்டுமே மிஞ்சும். ஆனால் இதில் சில நன்மைகளும் உள்ளன. மாதவிடாய் காலங்களில் உறவால் ஏற்படும் நன்மைகள், கெடுதல்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும்போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் ரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் ரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான ரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது.

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களைவிட சற்று அதிகமான அளவில் ரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும்போது கருப்பை கழிவுகள் வேகமாக வெளியே தள்ளப்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.625.500.560.350.160.300.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும்போது, பெண்களுக்கு பாலுணர்ச்சி அதிகம் தூண்டப்படுவதோடு, உறவில் ஈடுபடவும் தோன்றும். மேலும் மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் ரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

மாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதனால் 28 நாட்கள் அதாவது குறைந்த கால மாதவிடாய் சுழற்சியைக் கொண்டவர்களாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாதவிடாய் காலத்தில் உறவின் போது படுக்கை விரிப்புக்களில் ஏற்படும் இரத்தக்கறைகளை நீக்குவது என்பது கடினம். ஆனால் உறவு கொண்ட உடனேயே படுக்கை விரிப்பை உப்பு கலந்த குளிர்ந்த நீரில் ஊற வைத்து அலசி, பின் கறை நீக்கிகளை மேலே தெளித்து மீண்டும் அலசினால், இரத்தக்கறைகளைப் போக்கலாம்.

மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.

Related posts

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

nathan

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!

nathan

இதயத்தை இதமாக்கும் 10 வழிகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்… விஷ பூச்சிகள் கடித்து விட்டதா உடனே இந்த மூலிகை உபயோக படுத்துங்க..

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!

nathan

சுவையின்மைக்கான சித்த மருந்துகள்

nathan

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan