25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
rtyrtyt
ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்..சிறுநீரக கற்களை தவிடு பொடியாக்கும் அடி வாழைமரத்தின் சாறு..

சிறுநீரகத்தில் கற்களை கரைக்க வாழைத்தண்டைச் சாறாக்கி குடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வாழையின் பலன்கள் அளவிட முடியாதது. வாழை மரத்திலிருந்து பெறப்படும் வாழைப்பழம், வாழைக்காய், வாழையிலை, வாழத்தண்டு அனைத்துமே மிகச்சிறந்த மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது.

வாழைத் தண்டை பொரியலாக்கி, கூட்டாக்கி சாப்பிடுவதுண்டு. ஆனால் சிறு நீரகக் கற்களுக்கு இதை சாறாக்கி குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி குடிக்கும் போது இதனுடைய பலன் பலமடங்கு அதிகமாகும் என்றும் சொல்கிறார்கள். வாழைத்தண்டு சாறை குடிக்கும் போது இதை வடிகட்டாமல் அப்படியே குடித்தால் உடலுக்கு மேலும் நன்மை பயக்கும். அதிக நார்ச்சத்துகள் கிடைக்கும்.

வாழைத்தண்டு நெஞ்செரிச்சல், நீரிழிவு பாதிப்பு, இரத்த அழுத்தம், இரத்த சோகை, மலச்சிக்கல் இப்படி பல்வேறு விதமான குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வளிக்கிறது. அதே நேரம் சிறுநீரக உறுப்புக்கு அளவிட முடியாத மருத் துவ குணங்களைத் தருகிறது என்பதை மருத்துவர்களும் உறுதிபடுத்துகிறார்கள்.
rtyrtyt
சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று உண்டானால் அதை விரைந்து குணப்படுத்தும் சக்தி கொண்டது வாழைத்தண்டு சாறு. சிறுநீரக கற்களை உருவாகாமல் தடுக்கவும். கற்களை கரைக்கவும் இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. வாழைத்தண்டு கடைகளில் கிடைக்கும் சாறாக்கி குடித்தால் நாளடைவில் இது பலனளிக்க தொடங்கும் ஆனால் மாத்திரைகள் போல் வாழைத்தண்டு சாறிலும் ஒருவாரத்திலேயே பலன் அளிக்க தொடங்குமா என்று கேட்டால் அதற்கும் நம் முன்னோர்கள் சிகிச்சை முறை வைத்திருக்கிறார்கள்.

வாழைத்தோப்பு வைத்திருப்பவர்கள் வாழை மரத்தை குலையோடு விற்பனை செய்ய வெட்டி எடுப்பார்கள். அப்போது வாழை மரத்தின் அடிப்பகுதி மட்டும் அப்படியே கிடக்கும். அதாவது வேர்ப்பகுதியோடு இணைந்த அடிப்பகுதி அப்படியே இருக்கும். வாழை மரத்தை வெட்டிய உடன் அடிப்பகுதியில் அகலமான அளவுக்கு இலேசாக குழி தோண்டி அதன் மேல் ஒரு மெல்லியத்துணியால் போர்த்தி கட்டிவிடவேண்டும்.

மறுநாள் வாழைமரத்தின் அடியில் போர்த்தியிருந்த துணியின் கட்டை அவிழ்த்துப்பார்த்தால் அந்த இலேசான பள்ளத்தில் வாழையின் அடிப்பாகத் திலிருந்து அதன் சாறு சுரந்திருக்கும். அந்த சாறை அப்படியே எடுத்து பருக வேண்டும். இது போல் ஒரு வாரம் வரை அதன் சாறை பருகிவந்தால் சிறுநீரக கல் எவ்வளவு அவஸ்தையைக் கொடுத்தாலும் காணாமல் போய்விடும் என்கிறார்கள் முன்னோர்கள்.

முன்னோர்களின் கைவைத்தியத்தில் இதுவும் ஒன்று என்றாலும் வாழைத்தண்டு சாறின் பலனை மருத்துவர்களே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் வாழை மரத்திலிருந்து இயற்கையாக சுரக்கும் இந்த சாறு நிச்சயம் அதீத பலனையும் அற்புத குணங்களையும் கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்றும் கிராமங்களில் மூத்த குடிமக்கள் இதை அருந்துகிறார்கள். உங்கள் வீட்டில் வாழை குலை தள்ளியதும் மரத்தை வெட்டிய பிறகு அடிப்பாகத்தில் இலேசாக பள்ளம் தோண்டி துணியால் போர்த்தி மறுநாள் கட்டவிழ்த்து பாருங்களேன். பள்ளத்தில் இருக்கும் சாறு உங்கள் ஆரோக்யத்தை அற்புதமாக அதிகரிக்கும்…

வாழைமரம் தேடித்தானே ஓடிகிறீர்கள்.. நானும் தேடி கொண்டிருக்கிறேன்..

Related posts

100 கலோரி எரிக்க

nathan

வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க… தெரிஞ்சிக்கங்க…

nathan

செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் பாதிப்புக்கள் என்ன தெரியுமா?…

sangika

குழந்தைகளுக்கு இந்த பொம்மைகளை வாங்கி கொடுக்காதீங்க..!தெரிந்துகொள்வோமா?

nathan

தொற்று நோயோட அறிகுறியாம்! உங்க முடி மற்றும் வாயில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா…

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

வெந்தயத்தையும் கருஞ்சீரகத்தையும் இப்படி சாப்பிட்டால் வயிறு வேகமாக சுருங்கும் என்பது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிட்ட உடனே தேநீர் அருந்தினால் என்ன நடக்கும்..?!

nathan

மல்லிகையின் மகத்தான பயன்கள். விந்தணு உற்பத்தியை அதிகரிக்குமா?

nathan