கிவி ஊட்டச்சத்துக்களின் உறைவிடம். இதிலுள்ள பொட்டாசியத்தின் அளவு ஒரு வாழைப்பழத்தில் உள்ள அளவை காட்டிலும் அதிகம். உயிர்ச்சத்து சி ஒரு ஆரஞ்சு பழத்திலுள்ள அளவை விட அதிகம். சருமம் பளபளக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஆல்ஃபா லினொலிக் அமிலம் இதில் அதிக அளவு உள்ளது. அதனால் சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு 400 முதல் 500 மைக்ரோ கிராம் அளவு ஃபோலிக் அமிலம் தேவைப்படும். இதன் மொத்த அளவும் ஒரு கிவி பழத்தில் உள்ளது. அதனால் முதல் மூன்று மாதகாலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் இதை எடுத்துக் கொள்ளலாம்.
இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் உயிர்ச்சத்து-சி நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, குழந்தைகளுக்கு உண்டாகும் மூச்சுப்பிடிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதில் உள்ளது. மலமிளக்கிய பண்புகள் நிறைந்துள்ள கிவி மலச்சிக்கலை அகற்றி குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
கிவி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த பழத்தை உட்கொள்வதால் அடிபொஜெனெசிஸைக் (adipogenesis) கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் நீரிழிவு நோயைத் தடுக்க இயலும். ஆழ்ந்து தூங்குவதற்கு உதவும் ‘செரொடனின்’ என்னும் ஹார்மோனை சுரக்க உதவுகிறது கிவி. இது ‘இன்சோமினியா’ எனப்படும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வாகும்.