30 வயதை தாண்டினாலே முகத்தில் சுருக்கம் அல்லது கோடுகள் தோன்றி முதுமையாக காட்டுகிறது. சதை நெகிழ்ந்து தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது. இது நமது அழகினையே கெடுத்து விடுகின்றது. நமது முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 1
முல்தானிமிட்டி – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
க்ளிசரின் – சிறிதளவு
செய்முறை
ஒரு முட்டையை எடுத்து வெள்ளை கருவை மட்டும் ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் முல்தானிமிட்டியை சேர்த்து கலக்கவும். சில துளிகள் க்ளிசரின் மற்றும் தேனை இதனுடன் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி ஒரு பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவவும். எண்ணெய் சருமமாக இருந்தால் க்ளிசரின் பயன்படுத்த வேண்டாம்.
எண்ணெய் சருமமாக இருந்தால் மட்டும் முல்தானிமிட்டியை பயன்படுத்தவும் . இது முகத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை குறைக்கும். முகத்தில் உள்ள கோடுகள், கறைகள் போன்றவற்றையும் இது குறைக்கும். வறண்ட சருமமாக இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது