36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க.

*தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப்  பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்  பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை  குறையும்.

*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த்  தன்மை நீங்கும்.

*வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால்  பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப்  பயன்படுத்துங்கள். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.

*வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து  கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

nathan

கண்ணுக்குக் கீழே கருவளையமா கவலை வேண்டாம்…..

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? இதோ சில வழிகள்!

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

nathan

முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை வேகமாக மறைப்பது எப்படி?

nathan