தூக்கம் நமது அனைவர்க்கும் மிகவும் அவசியமான ஓன்று. உணவு இல்லாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் மரணம் நிச்சயம். சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதுதான்.
சிலர் என்னதான் சீக்கிரமாகவே படுக்க சென்றாலும் தூக்கம் வரவே வராது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் பின்வரும் சில முயற்சிகளை மேற்கொண்டால் கட்டாயம் பலன் கிடைக்கும்.
1 . தூங்க செல்வதற்கு முன்பு சிறு குளியல் போட்டுவிட்டு சென்ட்ரல் உடலும், மனதும் புத்துணர்ச்சி அடையும். இதனால் நிம்மதியான தூக்கம் வரும்.
2 . தூங்குவதற்கு முன்பு ஒருமுறை பல் துலக்கிவிட்டு செல்வது மிகவும் ஆரோக்கியமான ஓன்று. மனதுக்கு இதமான பாடல்களை கேட்டாலும் நல்ல தூக்கம் வர உதவும்.
3 . வெறும் தரையில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். தரையில் இருக்கும் சூடு நேரடியாக உங்கள் உடலில் இறங்குவதால் சரியான தூக்கம் வராமல் இருக்கும். எனவே பாய் அல்லது ஏதாவது துணியை தரையில் போட்டு தூங்க வேண்டும்.
4 . தூங்குவதற்கு முன்பு டீ, காபி குடிப்பது புகையிலை, சிகரெட் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை தவிர்த்துவிட்டு தூங்க செல்வது மிகவும் நல்லது.
5 . நல்ல காற்றோட்டமான இடத்தில் தூங்க வேண்டும். சரியான காற்று இல்லாமல் கூட உங்களுக்கு சரியான தூக்கம் வராமல் இருக்கும். அதேபோல தூங்கும் அறையில் கொசு வர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
6 . மிக முக்கியமான ஓன்று, தூங்க சென்ற பிறகு உங்கள் தொலைபேசியை அணைத்து வைத்துவிடுங்கள். அல்லது, தூங்கும் அறைக்கு தொலைபேசியை எடுத்து செல்லாதீர்கள். சரியான தூக்கம் வராமல் இருக்க இது ஒரு முக்கிய காரணம்.