28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ykjykj
ஆரோக்கியம் குறிப்புகள்

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

ஒரு பெண்ணின் கருத்தரித்திருக்கிறாள் என்பது மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடிய செய்தியாகும். மனித வாழ்க்கை மற்றும் உடல் ஆகிய இரண்டும் அவ்வப்போது மாற்றங்களைச் சந்திக்கும்.

அப்படி கருத்தரிக்கும் போது உடல் அழகு சார்ந்த மாற்றங்கள் அதிகமாக நிகழ்கின்றன.

கருவுற்ற பிறகு தோல் மற்றும் முடி சார்ந்த பிரச்சினைகள் அல்லது வளர்சிதை மாறுபாடுகளை சந்திக்க நேரிடும். எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க இருக்கிறோம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுதல் கர்ப்பகால பயங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

முடி மற்றும் சரும பாதிப்பு

கருவுற்ற பிறகு ஏற்படும் ஹார்மோன்( ஈஸ்ட்ரோஜன், ப்ரோஸ்ட்ரோஜன்) மாற்றங்களால் பெண்களுக்கு அழகு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மார்பகம் பெரிதாகுதல் சோர்வு போன்றவை பெண்கள் கருவுறுதலுக்கு முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி எண்ணற்ற பாதிப்புகள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்காகவே கருவுறுதலால் பெண்களின் அழகில் ஏற்படும் மாற்றங்களை தொகுத்திருக்கிறேன்.
ykjykj
அடர்த்தியான பளப்பான முடி

கருவுறுதலுக்கு முன் இருந்த முடியை விட கருவுற்ற பிறகு முடி பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். இதற்கும் நீங்கள் கருவுற்றதால் உருவாகும் ஹார்மோன்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த ஹார்மோன்கள் முடி உதிர்வைத் தடுத்து வேர்களுக்கு நல்லப் பலன்களைத் தருகிறது. ஆனால் இந்த சந்தோசமான செய்தி பிரசவம் வரைக்கும் தான். பிரசவத்திற்கு முடி உதிர்தல் தொடங்கி விடுமாம். எனவே வைட்டமின் பி, அமினோ அமிலம் போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

கூடுதல் உடல் முடி

தலையில் மட்டுமல்ல உடலின் எல்லாப் பாகங்களிலும் முடிகள் வளர ஆரம்பிக்கும். வயிறு, மார்பகக் காம்புகள், முகம், பின்பகுதி என எல்லா இடங்களிலும் முடி வளர்கிறது. இப்படி வளர்கிறதே என்று யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இது தற்காலிக வளர்ச்சித் தான். முடிகளை சவரஞ்செய்வ்தால் எந்தப் பாதிப்பும் இல்லை எனவே தேவைப்படுவோர் சவரம் செய்துக் கொள்ளலாம்.

கரும்புள்ளிகள்

கருவுறுதலின் போது ஏற்படும் கருவளையங்கள் பொதுவாக மெலாஸ்மா என்று அழைக்கப்படுகிறது. இது முன் நெற்றி, கன்னங்கள், மேல் உதடு ஆகியவற்றில் கரும்புள்ளிகளை உருவாக்கும். ஈஸ்ட்ட்ரோஜன் அதிகமாகும் போது உடலில் உள்ள மெலானின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தான் இந்த கருவளையங்கள் ஏற்படுகிறது.

வயிற்றின் நடுவில் வித்தியாசமான கோடு

இந்த வித்தியாசமான கோடுகள் கர்ப்ப வரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கருமையான கோடுகள் 75 சதவீத கர்ப்ப பெண்களை பாதிக்கிறது. இந்த பாதிப்புக்கும் ஈஸ்ட்ரோஜனின் அதிகப்படியான சுரப்பே காரணம்.

சிலந்தி போன்ற நரம்புகள்

கர்ப்பகால ஹார்மோன்களுக்கு இங்கு நீங்கள் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில் அவைதான் உங்கள் தொப்பையை பெரிதாக்குகிறது. மேலும் நரம்புகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து இரத்த நாளங்களையும் பெரிதாக்குகிறது. இதனால் உங்கள் கால், தோள்பட்டை, முகம் ஆகியவற்றில் சிலந்தி நரம்புகள் போன்ற சிவப்பு நிறக்கோடுகளை உருவாக்குகிறது. இந்த பாதிப்புகளுக்கென்று மருந்துகள் எதுவும் கிடையாது.

கர்ப்ப முகப்பரு

கர்ப்ப காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ஹார்மோன்களின் வருகை முகச் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை முகத்தில் எண்ணெய் பசையை அதிகரித்து முகப்பருக்களை உண்டாக்க காரணமாக இருக்கிறது. கருத்தரித்த முதல் மாதத்திலேயே கர்ப்ப முகப்பருக்கள் தோன்றி விடுகின்றன. சில சமயங்களில் பிரசவத்திற்குப் பிறகும் இவ்வகை முகப்பருக்களின் பாதிப்புகள் இருக்கின்றன.

ரோசாசியா

கன்னங்களில் ஓங்கி அறைந்தார் போல் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கும். இது அழற்சியின் காரணமாக நிகழந்தது இல்லை. நரம்புகளில் இரத்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதால் இது மாதிரியான தோற்றம் வெளியில் தென்படுகிறது. மேலும் இது புறக்காரணிகளால் தான் நிகழ்கின்றன. சூட்டை ஏற்படுத்தும் உணவுகள், காரம், ஆல்கஹால், அதீத வெப்பம் அல்லது குளிர்மையான காலநிலை போன்ற காரணிகள் ரோசாசியாவிற்கு காரணமாக அமைகிறது.

தொங்கும் தோல்

உங்கள் உடலில் ஏதேனும் தோல் புதிதாக முளைத்து தொங்குவது போன்ற உணர்வைப் பெற்றால் அச்சம் கொள்ளாதீர்கள். இதுவும் கர்ப்ப ஹார்மோனின் வேலை தான். அது செல்லின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அதனால் தான் இந்தப் பாதிப்பு. பிரசவத்திற்கு பிறகு தோல் நிபுணர் இந்தக் கூடுதல் தோலை நீக்கி விடுவார்.

வரி தழும்பு

வரி தழும்பு 50 முதல் 90 சதவீத பெண்களை பாதிக்கிறது. எல்லா காலத்திலும் இந்த வரித்தழும்புகள் ஏற்படுகின்றன. ஆனால் கர்ப்பகாலத்தில் இந்த தழும்புகள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் உடலில் எடை தோலின் சக்தியை மீறி அதிகமாகும் போது இவ்வகை தழும்புகள் ஏற்படுகின்றன.

Related posts

உங்களுக்கு தெரியுமா வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்…!

nathan

ஆரோக்கிய நன்மைகள்….!! செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து குடிப்பதால்

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?

nathan

வேனல் கட்டி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

ஆண்களே! உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதை தடுக்க சில டிப்ஸ்…

nathan

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

nathan

சூப்பர் டிப்ஸ்!கணவரை கவர மனைவி பின்பற்ற வேண்டியவை

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளிடம் எப்போதும் பெற்றோர்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? மிகப்பெரிய பாதிப்புக்கள் அஜினமோட்டோ ஏற்படுத்தும்

nathan