25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
fsfdfdfd
ஆரோக்கியம் குறிப்புகள்

கொந்தளிக்கும் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்! `வாடகைத் தாய் முறையை ஒழித்துக்கட்டவே ஒழுங்குமுறைச் சட்டம்!’

குழந்தையில்லாத் தம்பதிகளுக்கு மிகப்பெரிய வரமாக இருப்பது, வாடகைத்தாய் முறை. ஆனால், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது வர்த்தகமாக மாறிவருகிறது.

உலக நாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வர்த்தக மையமாக இந்தியா செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.
வாடகைத் தாய்

இந்த நிலையில்தான், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா – 2019 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் வணிக ரீதியாகக் குழந்தை பெறுவதைத் தடுப்பதுடன், அப்பாவிப் பெண்களை அந்த மோசடியிலிருந்து காப்பாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
fsfdfdfd

வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதாவின் முக்கிய அம்சங்கள்

திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர், திருமணமாகி குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்; ஒருமுறை மட்டுமே, வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை தேவைப்படும் தம்பதியரில் பெண்ணுக்கு 23 – 50 வயதுக்குள்ளும் ஆணுக்கு 26 – 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தாய் சேய்

சமபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து அனைத்திலும் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு. வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை, தம்பதிகள் கைவிடக் கூடாது. சட்ட விரோதமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்க, இந்த சட்டம் வழி செய்கிறது. இதுபோன்ற மேலும் முக்கியமான அம்சங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்காதநிலையில், பல்வேறு திருத்தங்களுடன் இந்த மசோதா இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வாடகைத் தாய்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
gfgjfgj
வாடகைத் தாய் உரிமைக்காக`குளோபல் சரோகேட் மதர் அட்வான்சிங் ரைட் டிரஸ்ட்’ என்ற அமைப்பை நடத்தும் ஹரிஹரனிடம் இந்த மசோதா தொடர்பாகப் பேசினோம்.

“இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அதிகரித்து வருகிறது. வாடகைத் தாய்களுக்கு பணம் தருவதாகக் கூறி, பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்யும் செயல் அதிகமாக நடக்கிறது. ஆனால், நம் நாட்டில் வாடகைத் தாய் முறையைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தச் சட்டமும் இல்லை; அதைக் கண்காணிக்க அரசு அமைப்பு ஏதுமில்லை. இந்நிலையில் விதிமுறைகளுடன், வாடகைத் தாய் நடைமுறையை முறைப்படுத்தும் மசோதா கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. நிறைய பிரபலங்கள் பிரசவ வலிக்குப் பயந்து, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கின்றனர். இதுபோன்றவர்கள் மீதும், புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். மகப்பேறு காலத்தின்போதும், குழந்தைப்பேறுக்கு பிறகும் மொத்தம் 16 மாதங்கள் வாடகைத் தாய்க்கான இன்ஷூரன்ஸ் பயனளிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஒரேயொருமுறை மட்டுமே ஒரு பெண்ணால் வாடகைத்தாயாக இருக்க முடியும் என்கிறது இந்தச் சட்டம். இதனால் ஒரு பெண் பணத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாடகைத் தாயாக இருக்க நிர்பந்திப்பது தடுக்கப்படுகிறது.
ஹரிஹரன்

அதேநேரத்தில் வாடகைத்தாயாக இருப்பவர் சம்பந்தப்பட்ட கணவன் அல்லது மனைவிக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டவிரோத, வர்த்தக ரீதியிலான வாடகைத் தாய் முறை, முழுமையாகத் தடை செய்யப்படும். ஆனால், நெருங்கிய உறவினர் வாடகைத் தாயாக இருப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. அத்துடன் தன்னார்வத்துடன் வாடகைத்தாயாக முன்வரும் பெண்களின் உரிமையையும் இது பாதிக்கிறது. மேலும், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ வளர்ச்சி மூலம் கிடைத்த ஒரு வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளாத நிலையையும் உருவாக்கியுள்ளது” என்கிறார் ஹரிஹரன்.
ghjghj
இந்த மசோதாவின் சில விதிமுறைகள் பாராட்டக்கூடிய வகையிலும், பல்வேறு விதிமுறைகள் ஏற்க முடியாத வகையிலும் உள்ளது என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கச் செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம்.
குழந்தை

“குழந்தை இல்லாத தம்பதிகள் பயன்பெறவே, வாடகைத்தாய் முறை உருவானது. ஆனால், தற்போது நிறைவேறியுள்ள வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா அதற்குப் பயன்படுமா என்பதையே கேள்விக்குள்ளாகிறது. அதாவது, மசோதாவில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி ஒருவரால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. உதாரணமாக ஒரு பெண், ஒரேயொரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண், உறவினராக இருக்க வேண்டும்; திருமணமானவராக இருக்க வேண்டும்; அவருக்கு ஏற்கெனவே குழந்தை இருக்க வேண்டும். அவர் 25-35 வயதுடையவராக இருக்க வேண்டும். அவருக்கு உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்னை இருக்கக் கூடாது. இவை அனைத்துத் தகுதிகள் இருந்தாலும் அவர் வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்க வேண்டும். இத்தனையும் ஒருவருக்கு அமையுமா என்பது கேள்விக்குறியே!

யாரோ ஒருவர் வாடகைத் தாயாக இருக்கும்போது, கருவில் சுமந்து பெற்ற அவரை, அதன்பிறகு அந்தக் குழந்தை பார்க்கப் போவதில்லை. ஆனால், வாடகைத் தாயாகப்போகிறவர், குழந்தையில்லாத தம்பதிக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று இந்த மசோதா சொல்லியிருப்பதால், வளர்ப்புத் தாயைப் போலவே, வயிற்றில் சுமந்த தாயும் குழந்தையின் அருகிலேயே இருக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட குழந்தைக்கு சில மனரீதியான சங்கடங்கள் நேர வாய்ப்பிருக்கிறது.
மருத்துவர் சாந்திநெருங்கிய உறவினர் என்பது அவர்கள் ஒரே சாதியாகவோ, ஒரே மதமாகவோ இருக்கும். அதனால் சாதி, மதத்தைக் காக்கும்வகையில் இருப்பதுபோல தோன்றுகிறது.

ரத்தம், உடல் உறுப்புகளை யாரிடமும் பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கும்போது வாடகைத் தாய் முறைக்கு மட்டும் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்பதில் உள்நோக்கம் இருக்கலாம் என்பதுபோன்ற சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. அதாவது, நெருங்கிய உறவினர் என்பது அவர்கள் ஒரே சாதியாகவோ, ஒரே மதமாகவோ இருக்கும். அதனால் சாதி, மதத்தைக் காக்கும்வகையில் இருப்பதுபோல தோன்றுகிறது. அதேபோல உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் இல்லையென்றால் அவர்கள் குழந்தை பெறுவதற்கான வழிமுறை பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள உடல் தகுதியில்லை என்பதைத் தெரிந்தும்கூட சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் ஏன் இந்த வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்? மேலும், இந்த மசோதாவின்படி சமபால் ஈர்ப்பாளர்கள், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், தனியாக வாழும் ஆண் அல்லது பெண்ணுக்கும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படாதது மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இடைத் தரகர்களும் மருத்துவர்களும் அப்பாவி ஏழைப் பெண்களை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள் என்றால், அப்படி அவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அப்படியில்லாமல் ஒட்டுமொத்தமாக வாடகைத் தாய் முறையையே ஒழிக்கும்விதத்தில் இந்த மசோதா இருக்கிறது.
Baby

மேலும் குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருத்தரிப்பு உள்ளிட்ட குழந்தைப்பேறுக்கான சிகிச்சைகள் வசதிகளை உருவாக்க வேண்டும். தத்தெடுக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்” என்கிறார்.

Related posts

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு தோல்வி என்பதே கிடையாதாம்…

nathan

தொப்புளில் எண்ணை போடுங்கள்! அற்புதமான விஷயம்!

nathan

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

nathan

உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்த எண் சொல்வது உண்மையா என்று பாருங்கள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கட்டுக்கோப்பான உடலைப்பெற பின்பற்ற வேண்டியவை

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்

nathan

அந்த இடத்தில் அரிப்பா? தடுக்கும் எளிய வீட்டு வைத்தியம்

nathan

உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுங்க… அப்புறம் பாருங்க

nathan