29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hjhjh
ஆரோக்கிய உணவு

இந்த நேவி பீன்ஸ் சாப்பிட்டிருக்கீங்களா? வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

நேவி பீன்ஸ் இது கடற்படை பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன. ஃபெசோலஸ் வல்காரிஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.

இது ட்ரை பீன்ஸ், ஹாரிகாட் பீன்ஸ், பீ பீன்ஸ் மற்றும் குள்ள பீன்ஸ் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறியதாக, ஓவல் வடிவில் லேசான வெண்மை நிற சருமத்துடன் காணப்படும்.

இதை அறுவடை செய்ய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். இந்த பீன்ஸை நீண்ட நாட்களுக்கு கூட பத்திரமாக வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் நேவி பீன்ஸில் 337 கிலோ கலோரிகள், 12.10 கிராம் தண்ணீர் சத்து உள்ளது.
போலேட் – 364 மைக்ரோ கிராம்
புரோட்டீன் – 22.33 கிராம்
கார்போஹைட்ரேட் – 60.75 கிராம்
நார்ச்சத்து – 15.3 கிராம்
கால்சியம் – 147 மில்லி கிராம்
இரும்புச் சத்து – 5.49 கிராம்
பாஸ்பரஸ் – 407 மில்லி கிராம்
மக்னீசியம் – 175 மில்லி கிராம்
சோடியம் – 5 மில்லி கிராம்
பொட்டாசியம் – 1185 மில்லி கிராம்
ஜிங்க் – 3.65 மில்லி கிராம்
விட்டமின் பி3 – 2.18 மில்லி கிராம்

hjhjh
நினைவாற்றலை மேம்படுத்துதல்

இந்த பீன்ஸில் போலேட் அதிகமாக இருப்பதால் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் நினைவாற்றலை கடத்த உதவுகிறது. அதே மாதிரி அனிமியா, நரம்புக் குழாய் குறைபாடு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது ஹீமோசைட்டஸின் பற்றாக்குறையால் அல்சீமர் நோய் மற்றும் பர்கின்சன் நோய் வர வாய்ப்புள்ளது. எனவே இந்த பற்றாக்குறையை இந்த பீன்ஸ் கொண்டு போக்கலாம்.

புற்றுநோயை தடுக்கிறது

இந்த நேவி பீன்ஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நாள்பட்ட நோய்களை எல்லாம் தீர்க்க வல்லது. எனவே இந்த பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால் மார்பக புற்று நோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

டயாபெட்டீஸ்

இந்த நேவி பீன்ஸில் குறைந்த கிளைசெமிக் இன்டஸ் மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. இது குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோய் வருவதை தடுக்கிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் இந்த பீன்ஸை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியத்தை குறைக்கலாம்.

இதய ஆரோக்கியம்

அதிக ஹச் டி எல் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய நோய்கள் வருவது குறைக்கப்படுகிறது. அதிக அளவில் ஹீமோசைட்டஸின் உயரும் போது ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புள்ளது. நேவி பீன்ஸ் ஹச் டி எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ஹீமோசைட்டஸின் அளவையும் குறைக்கிறது. மக்னீசியம் இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. இதே மாதிரி இதய ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்

இந்த பீன்ஸில் உள்ள மாங்கனீஸ் மற்றும் காப்பர் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை தடுக்கிறது. இதனால் மாங்கனீஸ் நாள்பட்ட இரத்த அழுத்த நோய்கள் வராமல் காக்கிறது. காப்பர் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. உடம்பின் ஒட்டுமொத்த செயல்களையும் மேம்படுத்துகிறது.

மலச்சிக்கல்

நேவி பீன்ஸில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளன. இது சீரண சக்தியை மேம்படுத்துதல், மலச்சிக்கலை தடுத்தல் மற்றும் குடல் நோய்க்குறி போன்றவற்றை சரி செய்கிறது.இதிலுள்ள நார்ச்சத்துகள் வயிற்று போக்கு, அல்சர் போன்றவற்றை சரி செய்கிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

இதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் காப்பர் ஹூமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அனிமியா, இரத்த ஓட்டம், உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகளை களைகிறது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உடம்பின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

வளர்ச்சிக்கு உதவுதல்

நேவி பீன்ஸில் அதிகளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது செல்கள், தசைகள், எலும்புகள், திசுக்கள், இரத்த குழாய்கள் மற்றும் பிற பாகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பாதிக்கப்பட்ட செல்களை திசுக்களை சரி செய்கிறது. இதனால் குணப்படுத்தும் செயல் எளிதாக நடக்கும்.

சரும ஆரோக்கியம்

நேவி பீன்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமத்தை பாதிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

உடல் எடை இழப்பு

நேவி பீன்ஸில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் கலோரிகள் உடல் எடையை இழக்க உதவுகிறது. நார்ச்சத்துகள் வயிறு நிரம்பிய தன்மையை கொடுக்கும். இதனால் நீங்கள் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை விடுத்து எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.

வயதாகுதலை தடுத்தல்

நேவி பீன்ஸ் சருமம் வயதாகுவதை தடுத்து புதிய சரும செல்களை புதுப்பிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் ப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து நம்மை காத்து வயதாகுவதை தடுக்கிறது. இதனால் நீங்கள் வயதான காலத்தில் கூட ரொம்ப இளமையாக தெரிவீர்கள்.

ஆஸ்டியோபோராஸிஸ்

இது ஒரு எலும்பு பாதிப்பாகும். இதனால் எலும்புகள் பலவீனமடைந்து உடைய ஆரம்பித்து விடும். இதிலுள்ள போலேட், மக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் எலும்பு முறிவை தடுக்கவும் உதவுகிறது.

அழற்சியை போக்குதல்

நேவி பீன்ஸில் உள்ள காப்பர் அழற்சியை போக்க பயன்படுகிறது. ஹெபடைடிஸ், ஆஸ்துமா மற்றும் மலம் கழித்தலில் பிரச்சனைகளை களைகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆட்டோ இம்பினியூ டிஸ் ஆர்டர் நோய்கள் வராமல் காக்கிறது.

முடி உதிர்தல்

முடி உதிர்தல் பிரச்சனையை போக்குகிறது. இதில் அதிகளவு பொட்டாசியம், இரும்புச் சத்து இருப்பதால் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. எனவே ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் நீங்கள் நேவி பீன்ஸை எடுத்துக் கொண்டு வரலாம்.

கல்லீரல் ஆரோக்கியம்

நேவி பீன்ஸ் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அலசி வெளியேற்றுகிறது. இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்பு போன்றவை உள்ளன. எனவே இது எளிதில் சீரணிக்கக் பட்டு கல்லீரல் நோய் வராமல் தடுக்கிறது.

எடுத்துக் கொள்ளும் அளவு

எடுத்துக் கொள்ளும் அளவு வயது, ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நிலையைக் கொண்டு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் என்ற அளவு 5-8% தினசரி எடுத்துக் கொண்டு வரலாம். ஒரு நாளைக்கு 1/2 கப் நேவி பீன்ஸ் சாப்பிடலாம். உங்கள் குடலின் சீரண சக்தியும் நன்றாக இருக்கும்.

பக்க விளைவுகள்

ஒரு நாளைக்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலி ஏற்படும்.
பச்சையாகவோ அல்லது நன்றாக சமைக்காத நேவி பீன்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது நச்சாகும். மேலும் இப்படி சாப்பிடும் போது கால்சியம் உறிஞ்சுவதை தடைபடுத்தும்.
சிறுநீரக நோய் மற்றும் பலவீனமான சிறுநீரக உறுப்பு கொண்டவர்கள் இதை சாப்பிடக் கூடாது.

நேவி பீன்ஸ் சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்
2 கப் உலர்ந்த நேவி பீன்ஸ்
8 கப் தண்ணீர்
1 நறுக்கிய வெங்காயம்
3 பூண்டுகள்
2 பிரியாணி இலை
2 கப் நறுக்கிய கேரட்
உப்பு மற்றும் மிளகு தேவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

8 மணி நேரம் பீன்ஸை ஊற வைத்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்
ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றுங்கள்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களையும் பீன்ஸையும் சேருங்கள்.
இப்பொழுது மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்
இப்பொழுது உப்பு மற்றும் மிளகு சேர்த்து பரிமாறுங்கள்.
சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி.

Related posts

சத்து பானம்

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

நீங்க தேங்காய்ப்பால் பிரியரா? பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan

சுவையான தேங்காய் அவல் உப்புமா

nathan

உடல் எடையை அதிகரித்து, தோற்றத்தை மேம்படுத்த சில எளிய உணவுகள்!

nathan

எலுமிச்சையை வேக வைத்த நீரை தினமும் காலையில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

இதோ எளிய நிவாரணம்…வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பீன்ஸ் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா…?

nathan

இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் முள்ளங்கி

nathan