25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
cover 1542
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா கடகடன்னு வெயிட் குறையுதாம்..

எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், டயட் பின்பற்றினாலும் உங்கள் எடை குறைவதில்லை என்று வருத்தப்பட்டதுண்டா? லவங்கப் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை கொண்டு தயாரிக்கப்பட்ட டீ உங்களுக்கு ஆரோக்கியமான எடை குறைப்பை தருகிறது. மேலும் இது எளிதில் ஜீரணம் ஆகும் ஒரு ஆகாரமாக உள்ளது.

உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. தேவையற்ற கொழுப்பை முற்றலும் வெளியேற்ற தொடர் மற்றும் அதிக முயற்சி தேவை. இத்தகைய எடை குறைப்பிற்கு சிறப்பான தீர்வைப் பெற பொறுமை மிகவும் அவசியம்.

உடல் எடை அதிகரித்த எடை மற்றும் உடல் பருமன் உடலை பல்வேறு வகையில் பாதிக்கிறது, மேலும் ஒருவரின் உடல் வடிவத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது. உடல் பருமன் பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இதய பாதிப்பு போன்றவை உடல் பருமனால் உண்டாகும் சில உடல் பாதிப்புகளாகும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு எடை குறைப்பு என்பது மிகவும் அவசியம் ஆகிறது. அதிர்ஷ்டவசமாக சிறப்பான முறையில் எடை குறைப்பை மேற்கொள்ள லவங்கப் பட்டை மற்றும் பிரஞ்சி இலை டீ உதவுகிறது.

தேவையற்ற கொழுப்பு
உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. தேவையற்ற கொழுப்பை முற்றலும் வெளியேற்ற தொடர் மற்றும் அதிக முயற்சி தேவை. இத்தகைய எடை குறைப்பிற்கு சிறப்பான தீர்வைப் பெற பொறுமை மிகவும் அவசியம். குறுக்கு வழியில் மிகவும் கடினமான உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி எடை குறைப்பை ஏற்படுத்திக் கொள்வதால் பின்னர் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு உண்டாகிறது.

கலோரி அளவும் உணவும் இந்த காரணத்தால், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒரு ஆரோக்கியமான, கலோரி கட்டுப்பாடுள்ள எல்லா உணவுகளையும் இணைத்த ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். கூடுதலாக, எடை குறைக்கும் தன்மை உடைய இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரித்து எளிதில் உடல் எடை குறைகிறது. இந்த பதிவில், நாம் காணவிருப்பது ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைக்கும் தன்மை உடைய லவங்கப் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை டீ. இதற்கு சிறுநீர் பிரிப்பு மற்றும் சுத்தீகரிக்கும் தன்மைகள் உள்ளது. இந்த பதிவில் தொடர்ந்து, இந்த தேநீர் பற்றிய நன்மைகள் மற்றும் இதன் செய்முறையைக் காணலாம்.cover 1542

லவங்கப் பட்டைமற்றும் பிரிஞ்சி இலை
டீ லவங்கப் பட்டை மற்றும் பிரிஞ்சி இலை டீ ஒரு பிரபலமான பானம் ஆகும். இது எடை குறைப்பை ஆரோக்கியமான முறையில் ஊக்குவிக்கிறது. இந்த டீயின் ஊட்டச்சத்து கலவை காரணமாக ஆரோக்கியமான எடை குறைப்பு சாத்தியமாகிறது. இரண்டு மூலப்பொருட்களுக்கும் ஜீரணத்தை அதிகரிக்கும் மற்றும் நச்சுகளைப் போக்கும் தன்மை உள்ளது. இந்த தேநீரை தொடர்ந்து பருகி வருவதால் விரைவில் உங்கள் அதிகரிக்கப்பட்ட எடை குறைய உதவுகிறது. இந்த தேநீரை தங்கள் உணவில் இணைத்துக் கொள்பவர்கள் விரைவில் நல்ல தீர்வை பெற்று தங்கள் உடல் எடையை இழக்கின்றனர். அடுத்தது, நாம் இந்த தேநீரின் மூலப்பொருட்கள் பெற்றிருக்கும் சில நன்மைகள் பற்றி விரிவாகக் காண்போம்.

லவங்கப் பட்டையின் நன்மைகள் சமையல், மருத்துவம் மற்றும் வீட்டின் இதர பயன்பாடுகளில் உதவும் லவங்கப் பட்டை ஒரு சிறந்த மசாலாப் பொருள். இதில் எசன்ஷியல் ஆயில், அன்டி ஆக்சிடென்ட், மற்றும் ஊட்டச்சத்துகள் இருப்பதால் வளர்சிதை மாற்றம் துரிதமாக்கப்பட்டு, உடலின் ஆற்றல் விரைந்து செலவாகி எடை குறைப்பு சாத்தியமாகிறது. லவங்கப் பட்டையை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை உடலின் ஆற்றலுக்கு உதவியாக பயன்பட முடிகிறது. இதன் கூறுகள் சிறுநீர் பிரிப்பு மற்றும் நச்சுகளை வெளியேற்றும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இரத்தம் சுத்தீகரிக்கப்பட்டு நச்சுகள் மற்றும் திரவங்கள் வெளியேற உதவுகிறது.

பிரிஞ்சி இலையின் நன்மைகள் லாரல் என்ற செடியில் இருந்து பிரிஞ்சி இலைகள் கிடைக்கின்றன. இது ஒரு நறுமண மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒரு செடியாகும். உடலின் எடையைக் குறைக்கவும் அதிகரித்த கொழுப்பைக் குறைக்கவும் இந்த இலை காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் தங்கியுள்ள கழிவு பொருட்கள் வெளியேற உதவும் செரிமான தன்மை இந்த இலைக்கு உண்டு. அழற்சி வினை அல்லது நோய்கள் இதனால் தடுக்கப்படுகிறது. உடல் திசுக்களில் தக்க வைக்கப்பட்டுள்ள, எடை இழப்பிற்கு இடையூறாக இருக்கும் திரவங்களை வெளியேற்ற ஊக்குவிக்கும் டையூரிடிக் என்னும் சிறுநீர் பிரிப்பு பொருட்கள் இந்த செடியில் உள்ளன. பிரிஞ்சி இலையை எடுத்துக் கொள்வதால், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. இவை இரண்டு பொதுவாக எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும் உணர்ச்சி நிலைகள் ஆகும். மலச்சிக்கலை எதிர்த்தும் இவை போராடுகின்றன. செரிமானத்தின் போது ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதை மேலும் மேம்படுத்துகின்றன.4 154

இந்த ஆரோக்கியமான இயற்கை டீயால் உங்கள் எடை குறைப்பை ஊக்குவிக்க முடியும். செரிமானம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் போக்குவதற்கு இந்த டீ மேலும் உதவுகிறது. இந்த டீயை தயாரிப்பது மிகவும் எளிது. மற்றும் விரைவாகவும் இதனைத் தயாரிக்க முடியும். ஒரு வாரத்தில் பல முறை பருகுவதற்கு எளிதாக, இதனைத் தயாரித்து பிரிட்ஜில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இந்த தேநீரால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. சமச்சீரான உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் செய்து, அதன் இணைப்பாக இந்த தேநீரைப் பருகுவதால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பொருட்கள்: ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ஸ்பூன் லவங்கப் பட்டை தூள் (5 கிராம்) 6 பிரிஞ்சி இலை ஒரு ஸ்பூன் தேன் (25 கிராம்) தேவைப்பட்டால் செய்முறை முதல் வேலையாக, ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த நீரில் லவங்கப் பட்டை தூள் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து மேலும் கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மேலும் அந்த கலவையை 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து, டீயை ஆற விடவும். பருகும் பதத்திற்கு வந்தவுடன் அந்த தேநீரை வடிகட்டி ஒரு க்ளாசில் ஊற்றி பருகவும். முதல் கிளாஸ் பருகும்போது காலையில் வெறும் வயிற்றில் பருகவும், மீதம் உள்ள தேநீரை அந்த நாளின் மற்ற நேரங்களில் பருகலாம். என்ன வாசகர்களே, இந்த அருமையான தேநீரைத் தயாரிக்கத் தொடங்கி விட்டீர்களா? உடனடியாக இந்த தேநீரை தயாரித்து உங்கள் உணவுடன் இணைத்துக் கொள்வதால் எடை குறைப்பு என்பது எளிதில் உங்கள் வசப்படும்.

Related posts

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்?

nathan

தினமும் கக்கா போக கஷ்டப்படுறீங்களா? ஒரு ஸ்பூன் சேர்த்து குடிங்க…

nathan

மூங்கில் தாவர தண்டு சாப்பிட்டால் எடை குறையுமா?

nathan

மிளகாய் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! திருமணத்தில் இணையக்கூடாத ராசிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலைகளை செய்தால் பெண்கள் உடல் எடையை குறைக்கலாம்.!

nathan

அலெர்ட்! இத படிங்க ..முதியோர்கள் அதிகநேரம் செல்போன் பயன்படுத்தலாமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan