கர்ப்ப காலம்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் மிக முக்கியமான காலக்கட்டம்.
கர்ப்ப காலத்தில், தாய்க்கு இருக்கும் உணர்வுகளே குழந்தையின் குணமாக உருவெடுக்க இதுவும் ஒரு காரணம். அதுபோல, ஆரோக்கியமும் தாயிடமிருந்துதான் குழந்தைக்குக் கடத்தப்படும்.கருவுற்ற பெண்கள் நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தை சத்தத்தை உணரத் தொடங்கும். புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளின் இசையைக் கேட்கலாம். எலுமிச்சை, சந்தனம், ரோஜா, மல்லிகை, லாவண்டர் போன்ற நறுமணங்களைச் சுவாசித்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு வாசனை அறிமுகமாகும்.நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது, சின்ன சின்ன க்ராஃப்ட் வேலைகளைச் செய்வது போன்றவை மூளைக்கும் மனதுக்கும் வேலை தருவதால், குழந்தையின் மனநிலை நல்லதாக இருக்கும். உடலுழைப்புக்கான வேலைகள், யோகப் பயிற்சி, கோலம் போடுதல் போன்றவை பிரசவத்தை எளிதாக்கும். இவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு செய்யலாம்.குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டது, குழந்தை அழகாக இருக்கிறது, மகிழ்ச்சியாக உள்ளது என்பன போன்ற கற்பனையில் உதிக்கும் நேர்மறையான சிந்தனைகள், தேவைகளை டைரியில் எழுத வேண்டும். இதுபோல மகிழ்ச்சியான அனுபவங்களை அனுபவிப்பதுபோல எழுதிப் பழகினால், அதுபோலவே நடக்கும்.