kasthuri Manjal :
* கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும்.
* பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும்.
* கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.
* கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.
* மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்த துணியை காயவைத்து கண்களில் துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
நகத்தைச்சுற்றி உள்ள புண்ணிற்கு கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தடவலாம்.
* கஸ்தூரி மஞ்சள், விரலிமஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.
* கஸ்தூரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.