24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
827467 2255443449190809600 n
அசைவ வகைகள்

யாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு சமையால்

தேவையான பொருட்கள்:

ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை
வெண்காயம் – 2 பெரிய வெண்காயம்
உருளைக்கிழங்கு – 2 சிறு துண்டுகள்
பச்சை மிளகாய் – 5
உள்ளி: 5 – 6 பற்கள்
கடுகு, பெருஞ்சீரகம் – 1 மேசைக் கரண்டி
கறிவேப்பிலை – 2 -3 காம்பு
றம்பை – சிறிதாக வெட்டிய 8-20 துண்டுகள்

எண்ணெய் – தேவையான அளவு
சரக்கு மிளகாய்த்தூள் – (தேவைக்கேற்ப 2-3 தேக்கரண்டி)
உப்பு – தேவையான அளவு
தேசிக்காய் – அறைவாசி827467 2255443449190809600 n

செய்கை முறை:

வெட்டி சுத்தமாக்கிய ஆட்டிறைச்சியை, சிறிதளவு உப்பும், கறிமிளகாய் தூளும் சேர்த்து கலந்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெயை போட்டு சூடாக்கவும் (பாத்திரம் ஒட்டாத நொன் ஸ்ரிக்காக இருப்பது நல்லது).

எண்ணெய் சூடாகியவுடன் கடுகை போட்டு வெடித்ததும், பெருஞ்சீரகம், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு வெட்டிவைத்த வெண்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்து வதங்கி வரும் போது, கலந்து வைத்த இறைச்சியை வதக்கிய கலவையுடன் பிரட்டி மூடிவிடவும்.

இறைச்சியில் இருக்கும் தண்ணீரிலும் சட்டியில் உள்ள எண்ணெயிலும் அவிந்து பொரிய விடவும். இடைக்கிடை எரிந்து போகாது இருக்க அகப்பையால் கிளறி விடவும்.

இறைச்சி முக்கால் பதம் பொரிந்ததும் அதற்குள் தேவையான சரக்கு மிளகாய் தூளையும், சிறு துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கையும், அளவாக உப்பும் போட்டு கொஞ்ச தண்ணீரும் சேர்த்து கொதித்து அவிய மூடிவிடவும்.

ஆட்டிறைச்சி வெந்தவுடன் நெருப்பைக் குறைத்து பொடுபொடுக்கும் அளவிற்கு (நீர் வற்றும் வரை) அடுப்பில் விடவும். அதன் பின் கருவேப்பிலையைப் போட்டு பிரட்டி மூடிய பின் அடுப்பை அணைத்துவிடவும்.

சிறிது நேரத்தின் பின் இறக்கி எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். இப்போதுஆட்டிறைச்சி கறி! றெடி.

குறிப்பு:

சிலர் உருளைக் கிழங்கு போடுவது இல்லை. உருளைக்கிழங்கு போட்டால் கறி தடிப்பாக இருக்கும். உறைப்பு தேவைக் கேற்ப மிளகாய் தூளை கூட்டியும் குறைத்தும் பாவிக்கலாம்.

இன்னும் சிலர், மசாலைகளை வதக்காது பிறிம்பாக அரைத்தெடுத்து இறைச்சியுடன் போட்டும் சமைப்பார்கள். வினகர் சேர்த்தால் இறைச்சி மெதுமெதுப்பாக இருக்கும். ஆனால் சிலர் விரும்புவதில்லை. இஞ்சி ஒரு சிறுதுண்டை சிரியதாய் சீவி அல்லது குத்திப் போட்டும் சமைப்பார்கள் இஞ்சி இறைச்சியை மெதுமயானதாக்கும் என்பர்.

Related posts

மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி …

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan

மீன் வறுவல்

nathan

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு

nathan

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan