நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம்அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் உடல்வலி, சரும பிரச்சனைகள், தலைவலி ஆகிய பிரச்சனைகளை உண்டாகும்.
மேலும் சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய பல வழிகள் இருந்தாலும் இயற்கை முறையில் எப்படி சிறுநீரகத்தை சுத்தம் செய்ய முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
தண்ணீர்
சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தண்ணீரை தினமும் 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் குடித்து வந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.
குதிரைவாலி
குதிரைவாலியை நமது அன்றாட உணவு முறைகளில் சேர்த்து வந்தால், அது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்துவிடும்.
பழங்கள்
வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் சிறுநீரகத்தை சுத்தம் உதவுகிறது.
கீரைகள்
மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம். எனவே மெக்னீசியம் நிறைந்த கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை. ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.