22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
0.668.160.90
ஆரோக்கிய உணவு

சூடான நீரில் எலுமிச்சை, உப்பு கலந்து குடித்தால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்தால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்க உதவுகின்றன.

மேலும் தினமும் இதை காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வந்தால் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

0.668.160.90சூடான நீரில் எலுமிச்சை உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படும். இதனால் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • தினமும் மூன்று முறை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் உள்ள நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த ஜூஸை குடித்தால், ஒற்றைத் தலைவலி பரந்து போய்விடும். இது உடலில் செரோடோனினை அதிகமாக்கி, உடல் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனையை குறைக்க உதவுகிறது
  • உடலில் நீர் வறட்சி, மன அழுத்தம், மினரல்ஸ் மற்றும் விட்டமின் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • எலுமிச்சையில் விட்டமின் C சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த எலுமிச்சை ஜூஸை தினமும் குடிப்பதால், நமது உடம்பில் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடல் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.
  • கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. எனவே எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால், நரம்பு மண்டல பாதிப்பை தடுத்து, நல்ல உறக்கம் ஏற்படுத்துகிறது.
  • எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • உப்பில் இருந்து கிடைக்கும் முறையான மினரல் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
  • உப்பில் உள்ள எதிர்மறை அயனிகள், இதய துடிப்பை சீராக்கி, உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. எனவே இது இயற்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் கருவளத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகிறது.

Related posts

தூதுவளை அடை

nathan

வீட்டில் பயன்படுத்தும் மிளகில் கலப்படமா? கண்டறியலாம் தெரியுமா?

nathan

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட்

nathan

இந்த உணவுகள் எல்லாம் ஆரோக்கியமானதா இருந்தாலும் நீங்க அடிக்கடி சாப்பிடக் கூடாது! ஏன் தெரியுமா?

nathan

அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?

nathan

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பலன்களா..?!!

nathan

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

nathan

சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan