உங்களுக்கு தெரியுமா வெங்காயத்தில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..! வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில் ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம் கொண்டது வெங்காயம்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.