dfgdfg
ஆரோக்கியம் குறிப்புகள்

A முதல் எழுத்தாக இருப்பவரின் குணங்கள், மற்றும் எதிர்காலம்..

ஒருவரின் பெயர் என்பது தன்னிச்சையாக வைக்கப்படுவதில்லை. அதேபோல நமது குணங்கள், மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் நமது பெயருக்கு முக்கியப்பங்கு உள்ளது.

நமது பெயரின் முதல் எழுத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குணம் உள்ளது. இந்த பதிவில் முதல் எழுத்தான A- வில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்காலம்.

முதல் எழுத்து

A முதல் எழுத்தாக இருப்பதற்கு காரணம் அது முதன்மையான குணங்களை பிரதிபலிப்பதுதான். எப்பொழுதும் வரிசையில் முதலாக இருக்கும் இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், பொறுப்பானவராகவும் இருப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கும் இவர்கள் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தக்கூடியர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் குழுவின் முன்னேற்றம் இவர்களின் முடிவை பொறுத்ததாக இருக்கும்.

முதலாளியாக இருப்பீர்கள்

நீங்கள் அனைவரையும் பொறுப்பாக வழிநடத்த விரும்புவதால் நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கான விதிமுறைகளை நீங்களே உருவாக்கி கொள்வீர்கள். நீங்கள் சொந்த முயற்சியில் எதையும் சாதிப்பீர்கள் அதற்கு காரணம் அதனை செய்வதற்கான நம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த குணங்களால் நீங்கள் பெரும்பாலும் முதலாளியாகத்தான் இருங்க விரும்புவீர்கள் அல்லது இருப்பீர்கள்.

சாகசங்கள்

சோர்ந்து போய் அமர்வது என்பது உங்களால் இயலாத ஒன்று. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்பீர்கள். எங்கெல்லாம் வேடிக்கையும், சாகசமும் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் இருப்பீர்கள்.

dfgdfg
போலி தைரியம்

உங்கள் துணிச்சலும் நம்பிக்கையும் இயல்பானது, ஆனால் சில சமயங்களில், நீங்கள் நம்பிக்கை குறைவாக உணர்ந்தால், உங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள போலி தைரியத்தை முகத்தில் அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் கண்களுக்கு நீங்கள் எப்பொழுதும் தைரியமானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டுமென்று நடிப்பீர்கள்.

வேலை

வழிநடத்தும் எந்த வேலையும் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கு சரியான வழியை காட்ட நீங்கள் எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள். சொந்த தொழில், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

பிடிவாதம்

உங்களின் உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அது பல சமயங்களில் பிடிவாதமாக மாறி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் பிடிவாதத்தால் உங்களை விட மற்றவர்களுக்கே எப்பொழுதும் பாதிப்பு அதிகமாக இருக்கும். நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்ல நீங்கள் தயங்க மாட்டிர்கள்.

ஊக்கமிழப்பு

தன்னம்பிக்கை உங்களின் தனிப்பட்ட குணங்களில் ஒன்று. ஆனால் நீங்கள் அதே குணத்தை அனைவரிடமும் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு கீழே உள்ளவர்களிடம் நீங்கள் கடுமையாய் நடந்து கொள்வீர்கள். அது அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் செய்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களை ஊக்கமிழக்க செய்யும்.

காயப்படுத்துவது

மற்றவர்களை காயப்படுத்துவது மற்றும் தவறாக எடைபோடுவது உங்களிடம் இருந்து பிரிக்க முடியதா குணங்களாகும். காயப்படுத்தும் முன் மட்டுமல்ல காயப்படுத்திய பின்னரும் கூட நீங்கள் அதை பற்றி யோசிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நினைக்க மாட்டிர்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகத்தில் உருவாகும் கல்லின் வகைகளும் அதன் அறிகுறிகளும்….!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தா நீங்க வெயிட் போடவே மாட்டீங்க…

nathan

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா???

nathan

பெண் குழந்தை இருந்தா? நீங்க இதெல்லாம் செஞ்சே ஆகணும்!

nathan

உங்களுக்கு தெரியுமா முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எவ்வளவு நாள் இடைவெளி விட வேண்டும்?…

nathan

இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

sangika

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! முயன்று பாருங்கள்

nathan