32.3 C
Chennai
Tuesday, Jun 25, 2024
tydty
ஆரோக்கிய உணவு

பெண்களுக்கு, குழந்தைகளுக்கு அதீத சத்துக்கள் நிறைந்த உணவு வெல்லமாகும்

நாம் மறந்து போன முக்கிய உணவான “வெல்லத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது” என தெரிந்து கொண்டு அன்றாடம் உணவில் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்.

வெல்லத்தினால் ஏற்படும் நன்மைகள்:

வெல்லத்தினை இளவயது பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியமானதாகும். இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரித்து ஞாபக மறதியை தவிர்க்கலாம்.

கடந்த கால சித்தமருத்துவத்தில் அதிகப்படியாக வெல்லம் சேர்க்கப்பட்டு தான் மருந்துகள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா போன்றவற்றிக்கு, இது மிகவும் உகந்ததாகும்.

மேலும், இதில் ஆண்டி அலர்ஜிக் தன்மை மற்றும் நீர்ப்பு தன்மை இருப்பதனால் உடல் சமச்சீர் தன்மையை அடைய உதவும்.
tydty
உணவு உண்டபின் சிறிது வெல்லத்தை உண்பதை அக்காலத்தில் ஒரு பழக்கமாகவே வைத்திருப்பார்கள். இது செரிமானத் தன்மையை உருவாக்க கூடியது.

வெல்லத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உணவுக்குழாய், வயிறு, நுரையீரல், என உடல் உறுப்புகளை உறுதியாகவும், சுத்தமாகவும் வைக்கின்றது.

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை உடலில் சமமாக வைக்க இந்த வெல்லத்தை பயன்படுத்தலாம். இதனால் உடலிற்கு இரும்பு சத்தும், கால்சியமும் கிடைக்கின்றது.
gyhfty
காபி, மற்றும் டீ க்கு வெல்லத்தை பயன்படுத்தலாம். சர்க்கரை தயாரிப்ப்பின் போது, ரசாயனம் சேர்க்கப்பட்டு அது வெள்ளை நிறத்தை அடைய செய்வதனால், வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து மற்றும் நார்சத்து காணாமல் போய்விடும். நேரடியாக உபயோகிக்கையில் சத்துக்கள் உடனடியான உடலை சென்றடைகின்றன.

குழந்தைகளுக்கு வரக்கூடிய குடல்புழு பிரச்னை, அனிமியா, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வு, தலை சுற்றல் போன்றவற்றையும் குணப்படுத்த கூடிய அதீத சத்துக்கள் நிறைந்த உணவு வெல்லமாகும்.

Related posts

நல்ல சோறு – 1–சிறுதானிய உணவுகள், உணவே மருந்து!

nathan

சுவையான பாகற்காய் குழம்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்நீர் குடித்தால் உணவுக்குழாய் பாதிக்குமா?

nathan

இனியும் தவிர்க்காதீர்கள்! உலர் திராட்சையில் இப்படி ஒரு அதிசயம் இருக்கா?

nathan

சுவையான சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி

nathan

துத்திக் கீரை சூப்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிடும்!

nathan

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத காய்கனிகள் இதுவே..!

nathan

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்

nathan