அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது!
அதிர்ஷ்ட நிறங்கள்
இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.
நண்பர்கள்
6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது! ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத.(3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.
திருமணம்
திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்! மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு (?) ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
திருமண தேதி
திருமணம் 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
நோய்களின் விபரங்கள்
பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் உண்டு. இதய பலவீனம் இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். இந்திரியம் அதிகம் செல வு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும்.
அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.