25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ghfhkujikj
ஆரோக்கிய உணவு

சிறந்த மருந்து மாஇஞ்சி தெரியுமா?

இயற்கையான மருந்துகளில் இஞ்சியும் ஒன்று. இஞ்சி நார்த்தன்மை அதிகம் கொண்டிருக்கும். காரம் மிகுந்திருக்கும். ஆனால் மருத்துவக் குணங் கள் நிறைந்தது. இஞ்சியைத் தோல்சீவி உலரவைத்து பதப்படுத்தி எடுப்பதே சுக்கு. பாட்டி வைத்தியத்தில் சுக்குக்குதான் முதலிடம்.

இஞ்சியைத் தோல்சீவி பக்குவமாக சர்க்கரைப்பாகு சேர்த்து செய்யும் முறப்பா தான் செரிமானத்துக்கு அருமருந்து. அஜீரணக்கோளாறுகளை விரட்டி அடிக்க ஒரு துண்டு இஞ்சி முறப்பா போதுமானது. இஞ்சியின் குணத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவற்றைப்பற்றி எல்லோ ருமே தெரிந்துவைத்திருப்பதால் இன்னும் பலரும் அறியாத மாஇஞ்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மாங்காயின் மணத்தையும், இஞ்சியைப் போன்று தோற்றத்திலும் இஞ்சியின் குணத்தையும் கொண்டிருப்பதால் இது மா இஞ்சி என்று அழைக்கப் படுகிறது. நார்த்தன்மை குறைந்து மாவுச்சத்து அதிகம் இருக்கும் இது ஆயுர்வேதத்தில் அதிகம் மாஇஞ்சி பயன்படுத்தப்படுகிறது. வாயுத்தொல் லையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்து மாஇஞ்சி.

வாய்ப்புண்ணுக்கு தேங்காய் வயிற்றுப்புண்ணுக்கு மாங்காய் என்று சொல்வார்கள். இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பதோடு மேலும் கொழுப்பு சேராமல் தடுக்கவல்லது மாஇஞ்சி. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து மலத்தோடு வெளியேற்ற மாஇஞ்சி நல்லது. வயிற்றை சுத்தம் செய்யும் மருந்தாக இது பயன்படுகிறது.

சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்பசம் இருப்பவர்கள் மாஇஞ்சியை பச்சையாகவே சாலட் ஆக செய்து சாப்பிடலாம். குடல்களின் சீரான இயக்கத் துக்கும் இதுஉதவுகிறது. ஜெர்மனியில் ஆய்வின் போது மாஇஞ்சி தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் உடல் எடை கணிசமாக குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ghfhkujikj
மாஇஞ்சியில் புரதம், மாவுபொருள்கள், கால்சியம், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ,பி,சி அடங்கியிருக்கின்றன. இதில் உள்ள சீஸ்- ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருள்கள் தான் மாங்காய் வாசத்தை மாஇஞ்சிக்கு கொடுக்கிறது.

மாஇஞ்சியை தோல் சீவி வட்டவடிவமாக நறுக்கி, எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட் ஆக சாப்பிடலாம்.மாஇஞ்சியுடன் தேங் காய்,பச்சைமிளகாய்,பூண்டு வைத்து அரைத்து துவையலாக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசை மேல் தடவி மேலாக நல்லெண் ணெய்ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தயிர் வெங்காயம் சேர்ப்பது போலமாஇஞ்சியை நறுக்கி சேர்க்கலாம். மா இஞ்சியைத் துருவிஊறுகாய் போடலாம்.

மாஇஞ்சியை தோல்சீவி துருவி எடுத்துக்கொள்ளவும். உதிராக வடித்த சாதத்தை ஆறவிடவும். வாணலியில் கடுகு, உளுந்து, க.பருப்பு, வரமிள காய், கறிவேப்பிலைத் தூவி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து துருவிய மாஇஞ்சி சேர்த்து வதக்கி ஆறவைத்து சாதத்துடன்கலந்துசாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.

குளிர்காலங்களில் மாஇஞ்சியை உணவில் சேர்த்துக்கொண்டால் குளிரால் ஏற்படும் உடல்நிலை பாதிக்காது என்பவர்கள் ஆராய்ச்சியின் மூலம் அதை நிரூபித்தும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி மாஇஞ்சியை கேட்டு வாங்கி ருசியுங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!

nathan

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க

nathan

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க ……

nathan

சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

nathan

தெரிஞ்சிக்கங்க…தேனை தெரிந்து கூட இதனுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

ஆஹா பிரமாதம் -மாம்பழ மில்க் ஷேக்

nathan

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika