வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகில் எப்போதும் சரியான கவனம் செலுத்துவது இல்லை. பரபரப்பாக செல்லும் போது எப்படிங்க என்ற கேள்வி எழுதம். அதற்காகதான் இந்த எளிமையான வழிமுறைகள்.
கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.
சருமம் மற்றும் முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் பேஷியலை வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று மாறும்.
நகங்கள் அழகாக இருப்பதற்கு நகப் பூச்சு பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த நகப்பூச்சு சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. எனவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நகப்பூச்சைப் பூச வேண்டும்.
சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால் முடி தெரியாது.