36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
அழகு குறிப்புகள்

சற்றுமுன் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..!

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட். இவர் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்க்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தின் மூலம் திரைபடத்துக்கு அறிமுகமானார்.

இவர் கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். வில்லியம் ஹர்ட் கடைசியாக நடித்த தி கிங்க்ஸ் டாட்டர் படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

இவர் 1985ல் வெளியான கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில்லியம் ஹர்ட் ஆஸ்கார் விருது பெற்றார்.

சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வில்லியம் ஹர்ட் நேற்று மரணம் அடைந்தார்.

அவருக்கு 71 வயதான நிலையில் தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உயர் பிரிந்தது. வில்லியம் ஹர்ட் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.– source: dailythanthi

Related posts

நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம்….

nathan

இது தான் கஸ்தூரிக்கு மிகவும் பிடித்தமான புகை ப்படமாம் !!

nathan

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது.

nathan

நெஞ்சை உலுக்கும் காட்சி! கொரோனா பாதித்த தந்தைக்கு தண்ணீர் கொடுக்க போராடிய மகள்..

nathan

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.. பராமரிப்புக்கள்…

nathan

பிரபல சீரியல் நடிகர் தற்கொலை!

nathan

வெளியான பட்டியல் ! உலகிலே சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு இது தான்!

nathan

நீண்ட காலம் இளமையாக இருக்க உங்களுக்கான தீர்வு!

sangika