27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
Childhood Obesity
ஆரோக்கிய உணவு

diet tips obese kids – குழந்தை குண்டா இருக்கா? இந்த டயட்டை பின்பற்றுங்களேன்!!!

குழந்தைகளுக்கு பார்ப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், பின் அவர்களின் உடல் எடையானது அளவுக்கு அதிகமாகி, பிற்காலத்தில் மட்டுமின்றி, இப்போதும் அதிக சிரமப்படுவார்கள். ஏனெனில் தற்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக எடையைக் கொண்டு, அவர்களால் சரியாக நடக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இதனால் பல குழந்தைகள் தைரியமாக பள்ளியிலும் சரி, வெளியிலும் சரி, எந்த செயலையும் செய்ய முடியாமல் தன்னம்பிக்கை இழந்துவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டைப்-2 நீரிழிவு வருவதோடு, பின்னர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளது உடல் நலத்தை சரியாக பராமரிப்பது பெற்றோர்களின் கடமை.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான உணவு முறையை பின்பற்றாமல், போதிய உடற்பயிற்சி செய்ய வைக்காமல் இருப்பதால், குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் கரையாமல், உடலிலேயே தங்கி, குண்டூஸாக்குகின்றன. எனவே குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவை, சரியான நேரத்தில் கொடுத்து, அவர்களது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வையுங்கள். சரி, இப்போது குண்டாக இருக்கும் குழந்தைக்கு எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்ள வேண்டுமென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடல் எடையை குறைக்க ஆரம்பியுங்கள்.
Childhood Obesity

பழங்கள்
குழந்தைகளுக்கு பழங்களின் சுவை மிகவும் பிடிக்கும். ஆகவே ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, தர்பூசணி அல்லது பீச் போன்ற பழங்களையும் அவ்வப்போது கொடுக்க வேண்டும்.

ஜூஸ்
கார்போனேட்டட் பானங்களான கோகோ கோலா, மிரிண்டா, ஃபேண்டா போன்றவற்றை கொடுப்பதற்கு பதிலாக, ஆரஞ்சு, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்றவற்றால் செய்த ஜூஸ் கொடுக்க வேண்டும். அதிலும் இதனை தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும், உடல் எடையும் குறையும்.

காய்கறிகள்
பொதுவாக குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றால் பிடிக்காது. ஆனால் அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க, காய்கறிகளை வைத்து, சூப், சாலட் என்று செய்து கொடுக்கலாம். அதுவும் ப்ராக்கோலி, கேரட், பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை மிகவும் சிறந்தது, எனவே இத்தகைய காய்கறிகளை வைத்து, மதிய வேளையில் சமைத்து கொடுத்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

re

சாண்ட்விச்
குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாண்ட்விச் செய்து கொடுக்கலாம். அதுவும் இரண்டு பிரட் துண்டுகளிலும் கொழுப்பு குறைவாக உள்ள சீஸ் தடவி, பின் அதன் நடுவே வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் வெங்காயம் வைத்து கொடுப்பது நல்லது. வேண்டுமெனில் காய்கறிகளுக்கு பதிலாக பழங்களை வைத்தும் சாண்ட்விச் செய்து கொடுக்கலாம்.

இரவு உணவு
இரவில் 2 சப்பாத்தி, ஒரு பௌல் சாலட் அல்லது முளைக்கட்டிய பயிர்கள் கொடுத்தால், உடல் நன்கு ஆரோக்கியத்துடனும், உடல் எடையும் குறையும்.

ஆர்வத்தை அதிகரித்தல்
குழந்தைகளை தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை செய்ய வைக்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் விருப்பமான விளையாட்டுக்களில் அல்லது நடன வகுப்புக்கள், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட ஊக்கப்படுத்தினால், குழந்தைகளின் திறமை அதிகரிப்பதோடு, அவர்களது உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அவர்களை நன்கு ஓடியாடி விளையாட வைக்க வேண்டும்.

Related posts

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan

கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

nathan

தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்!குழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க!!!

nathan

சர்க்கரைக்கு பதிலாக இதை தினமும் பயன்படுத்தி பாருங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

உணவுக்குடல் புற்று நோயை தடுக்கும் அருமருந்து நெல்லிக்காய நீர்!!

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்தான சமையல்

nathan

மரவள்ளி கிழங்கு நன்மைகள் – maravalli kilangu benefits

nathan

உணவுக்கு பின் ஐஸ் தண்ணீர் அருந்தகூடாது

nathan