dubai beauty parlour
ஆரோக்கிய உணவு

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது.

எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம். சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!
dubai beauty parlour

* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.

* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.

* இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.
unnamedeqre
* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.

இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிச்சடி

nathan

உடல்நலத்திற்கு நல்லது என்ற பெயரில் சீனாவில் ஆல்கஹாலில் வயகாராவை கலந்து மதுவிற்பனை!!!

nathan

டெங்குவை கட்டுப்படுத்தும் அம்மான் பச்சரிசி

nathan

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள்!

nathan

சுவையான உருளைக்கிழங்கு சீசுவான்

nathan

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan