26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
urine
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களுக்கு ஏன் சிறுநீர்க்கசிவு ஏற்படுகின்றது?

பொதுவாக சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடுகின்றது.

இதனால் வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள்.

இதற்கு காரணம் நாம் சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் இது போன்ற பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும்.

இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறப்படுகின்றது.

வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவும் ஒரு வினோதமான நோய்தான் என கூறப்படுகின்றது. சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.

அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

இதனை எப்படி சரி செய்யலாம்?
  • நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும்.
  • சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும்.
  • தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.
  • குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.625.0.560.350.160.30

Related posts

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

nathan

நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவை தரும் பேஷியல் யோகா

nathan

பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

nathan

பாட்டி வைத்திய மருத்துவ குறிப்புகள்

nathan

இவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள் 

nathan

பருவ பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் இரத்த சோகை

nathan

காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?

nathan