36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து இயற்கையாக விடுபட முடியுமா? நிச்சயம் முடியும். அதிலும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிதில் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கீழே தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு வெங்காயம்

சிவப்பு நிற வெங்காயம் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூக்கில் உள்ள வீக்கத்தைத் தடுத்து, சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்கும்.

அதற்கு சிவப்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதில் தேன் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இப்படி தினமும் சாப்பிட்டால், தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

சோம்பு டீ

சோம்பில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

அதற்கு 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், சீக்கிரம் தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஆவி பிடிப்பது

மூக்கில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் எளிய வழிகளுள் ஒன்று ஆவி பிடிப்பது. எனவே ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் நீரை நிரப்பி, துணியால் தலையைமூடி 15-20 நிமிடம் ஆவி பிடியுங்கள்.

இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஆவி பிடியுங்கள். இதனால் தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இஞ்சி

தும்மலில் இருந்து விடுபட இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஏராளமான மருத்துவ பண்புகள் சுவாச பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தும்மலில் இருந்து விரைவில் விடுவிக்கும்.

அதற்கு இஞ்சியை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். அப்படி தினமும் குடித்து வந்தால், சைனஸ் தொற்றுக்களால் ஏற்படும் தும்மலில் இருந்தும் விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி மிகச்சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் பொருள். அதனை அன்றாடம் எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

அதற்கு சுடுநீரில் சிறிது உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து, தினமும் 2-3 முறை குடித்து வர, தும்மல் பிரச்சனை நீங்குவதோடு, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில் தும்மலில் இருந்து உடனடியாக விடுவிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். மேலும் இது தும்மலை உண்டாக்கும் வைரஸ் மீண்டும் தாக்காமல் தடுக்கும்.

அதற்கு மூக்கு பகுதிகளில் சிறிது லாவெண்டர் ஆயிலைத் தடவ வேண்டும். இப்படி செய்வதால், தும்மல் தொடர்ச்சியாக வராமல் இருக்கும்

Related posts

முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

nathan

நக சுத்தியை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!தெரிஞ்சிக்கங்க…

nathan

அலட்சியம் வேண்டாம் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா?

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி?

nathan

அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்

nathan

கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா? அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு…

nathan