25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
thyroid feat
மருத்துவ குறிப்பு

நிபுணரின் அட்வைஸ் பயப்படாதீங்க ராய்டு குறைபாடு…

இது நீங்கள் நினைப்பதுபோல பெரிய பிரச்னையெல்லாம் கிடையாது. தைராய்டு குறைபாட்டுக்கான மாத்திரையை 30 அல்லது 40 வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் பக்க விளைவுகள் ஒன்றும் வராது. தவிர, இதில் குணமாகிவிடக்கூடிய தைராய்டும் இருக்கிறது”

– நாளமில்லா சுரப்பியல் நிபுணர் ஸ்ருதி சந்திரசேகரனின் ஆரம்பப் பேச்சே, தைராய்டு குறைபாடு பற்றி, இது நாள் வரைக்கும் பெண்களின் மனதுக்குள் இருந்த பயத்தைப் போக்கும் வண்ணம் இருந்தது.

thyroid feat

”பெண்களிடையே தைராய்டு குறைவாக சுரக்கிறப் பிரச்னைதான் அதிகமாகக் காணப்படுகிறது. இதை நாங்கள் ஹைப்போ தைராய்டிசம் என்று சொல்வோம். இதையும் பிரைமரி, செகண்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். கழுத்தில் பட்டாம்பூச்சி போல் இருக்கிற தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாத நிலைதான் பிரைமரி. பொதுவாக இந்தப் பிரச்னை பரம்பரைத் தன்மை காரணமாக வரலாம். பாட்டிக்கு, அம்மாவுக்கு, அம்மாவுடன் பிறந்தவர்களுக்கு அல்லது அப்பாவுடன் பிறந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்திருந்தால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் வர வாய்ப்பிருக்கிறது. தைராய்டு சுரப்பியை அறுவைசெய்து எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வரும்.

மூளையில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை ஏற்பட்டு அதன் மூலம் வருகிற தைராய்டு குறைபாட்டை செகண்ட்ரி ஹைப்போ தைராய்டிசம் என்போம்.
9 Signs You Have an Underactive Thyroid
ஹைப்போ தைராய்டினால், சருமம் வறண்டுப்போதல், முடி உதிர்தல், மாதவிடாய் பிரச்னை, கருத்தரிப்பது தள்ளிப் போவது, ரத்தசோகை, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், உடல் சோர்வு எனப் பல பிரச்னைகள் வரும் என்றாலும், இவை அத்தனையுமே எல்லோருக்கும் வந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஒரு சிலருக்கு மலச்சிக்கல் வரலாம், இன்னும் சிலருக்கு முடி உதிர்தல் ஏற்படும்.

தைராய்டு சுரப்புக் குறைபாட்டில் பிரைமரி என்று ஒரு நிலைபற்றி சொன்னேன் இல்லையா. அதை, ஜஸ்ட் ரத்தப் பரிசோதனை செய்தே கண்டுபிடித்து விடலாம். செகண்ட்ரி என்றால், ஒரு சிலருக்கு மட்டும் ஸ்கேன் செய்ய வேண்டி வரலாம்.

ஒரு சிலருக்கு சிவியர் தைராய்டு பிரச்னை இல்லாமல், சப் கிளினிக்கல் தைராய்டிசம் இருக்கலாம். அதாவது கழுத்தில் இருக்கிற சுரப்பியில் இருந்து சுரக்கிற T3, T4 நார்மலாக இருக்கும். ஆனால், மூளையில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கிற TSH அதிகமாக இருக்கும். இந்த வகை பெண்களுக்கு, கருத்தரிக்க வேண்டும் என்பது போன்ற வாழ்வியல் சிக்கல் இருந்தால், உடனே மாத்திரைக் கொடுக்க ஆரம்பிப்போம். மற்றவர்களுக்கு, தைராய்டு காரணமாக கொலஸ்ட்ரால் போல வேறு ஏதாவது பிரச்னை வந்துவிட்டது என்றால் மாத்திரைக் கொடுப்போம்.

தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்போம். இதற்கான முக்கியக் காரணம் பரம்பரைதான். தவிர, டென்ஷன், ஸ்டிரெஸ் அதிகமாக இருந்தாலும், தைராய்டு சுரப்பியைத் தூண்டி அதிகம் சுரக்க வைத்துவிடலாம். இவர்களுக்கு கடகடவென உடல் எடைக் குறையும். 15 அல்லது 20 கிலோகூட குறையலாம். சிலர் நீரிழிவோ, புற்றுநோயோ என்று பயந்து விடுவார்கள். ஆனால், ஹைப்பர் தைராய்டு இருந்தாலும் இப்படி எடைக் குறையும்.

இவர்களுக்கு, படபடப்பு, டென்ஷன், வியர்த்துக் கொட்டிக்கொண்டே இருக்கும். கை, கால்களில் நடுக்கம் இருக்கலாம், தூக்கமின்மை பிரச்னை இருக்கும். அடிக்கடி மலம் கழித்துக் கொண்டே இருப்பார்கள். சிலர், சாப்பிட்ட உடனே மலம் கழிக்கப் போவார்கள். ஆனால், பேதி ஆகாது.

திடீரென உடல் எடை குறைகிறது என்றால், தைராய்டுக்கன ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். சிலருக்கு அயோடின் ஸ்கேன் செய்து, தைராய்டு எதனால் அதிகமாகச் சுரக்கிறது என்றும் பார்ப்போம். இதையும் எளிய முறையில் மாத்திரையிலே சரி செய்துவிடலாம். மாத்திரை சாப்பிட ஆரம்பித்த பிறகு, 6 முதல் 8 வாரத்துக்கு ஒருமுறை தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை செய்து, தைராய்டு கன்ட்ரோலில் இருக்கிறதா என்று பார்ப்போம். ஹைப்பர் தைராய்டுக்கு வாழ்க்கை முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மாத்திரையின் அளவை படிப்படியாகக் குறைத்து, ஒரு கட்டத்தில் நிறுத்திப் பார்ப்போம். தைராய்டின் சுரக்கிற அளவு சரியாக இருந்தால் மாத்திரையை நிறுத்திவிடலாம்.

index 1

தைராய்டு சுரப்பியில் கட்டியும் வரலாம். இந்தக் கட்டி இருந்தாலுமே சிலருக்கு தைராய்டு சுரப்பி சரியாகவே வேலை பார்க்கும். சிலருக்கோ தைராய்டு குறைவாக அல்லது அதிகமாகச் சுரக்கலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கட்டியின் அளவு மற்றும் திசு பரிசோதனை செய்து, அந்தக் கட்டி சாதாரணமானதா அல்லது புற்றுக்கட்டியா என்பதைக் கண்டறிவோம். சில கட்டிகள் மாத்திரைக் கொடுத்தாலே கரைந்து விடும். சில நேரம் ஆபரேஷன் செய்து கட்டியை எடுக்க வேண்டி வரலாம், இதற்கும் மாத்திரை சாப்பிட வேண்டிவரும்.

தைராய்டு மாத்திரை சாப்பிட ஆரம்பித்தால், வாழ்க்கை முழுக்க சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஏனென்றால், உங்கள் தைராய்டு ஹார்மோன் செய்கிற வேலையை இந்த மாத்திரைதான் செய்கிறது. காலையில் வெறும் வயிற்றில்தான் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். 30 அல்லது 40 வருடங்கள் தொடர்ந்து தைராய்டு மாத்திரை சாப்பிட்டாலும் எந்தப் பக்க விளைவும் வராது.

ஒரு சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் தைராய்டு குறைவாக சுரக்கிறப் பிரச்னை வரலாம். அதனால்தான், இன்றைக்கு எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் தைராய்டு பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்கிவிட்டார்கள். ஒருவேளை தைராய்டு இருந்து, மாத்திரை சாப்பிட்டால் கருவில் இருக்கிறது சிசுவுக்கு எந்தப் பிரச்னையும் வராது. மாத்திரை எடுக்கவில்லையென்றால்தான், குழந்தைக்கு மூளை வளர்ச்சி பிரச்னை ஏற்படலாம். கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு குறைபாடு வந்தவர்களுக்கு, குழந்தைப் பிறந்ததும் தைராய்டு மாத்திரைக் கொடுப்பதை நிறுத்திப் பார்ப்போம். இருந்தாலும் இவர்களுக்குப் பின்னாளில் தைராய்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால், வருடத்துக்கு ஒருமுறை ரத்த பரிசோதனை செய்து பார்க்கச் சொல்வோம்.

தைராய்டு வந்தாலும் ஹேப்பியாக இருக்கலாம், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் பெண்களே…

Related posts

உங்க உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? கரைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்

nathan

வல்லாரை வல்லமை

nathan

குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா?இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதா?

nathan

எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் இந்த இலை துவையல் அரைச்சு சாப்பிடுங்க !

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan