கடந்த ஐந்து ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்து வரும் பிரீத்தி விஜய், பல தாய்மார்கள் அடங்கிய ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பிலுள்ள ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்யும் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என்று கேட்கவே, நாம் ஏன் அதை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிரீத்தி விஜய்க்கு வந்துள்ளது.
தாய்ப்பால் எளிதில் கெட்டுப் போகக் கூடிய திரவம் என்பதால், நகைகள் செய்ய ஆரம்பிக்கும் போது தாய்ப்பால் கெடாமல் இருக்க பல வேதிப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார். ஆனாலும் ஒரு மாதத்திற்குள்ளாகவே தாய்ப்பாலின் நிறம் மாறிவிடுமாம். இறுதியில் தன் தோழிகளின் உதவியுடன் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்வதில் வெற்றியடைந்துள்ளார் பிரித்தி விஜய்.
குழந்தைபருவ நினைவுகளை பாதுகாக்கப்பதற்கு தாய்பால் மட்டுமல்லாமல் குழந்தைகளின் முடி, தொப்புள்கொடி, குழந்தையினுடைய முதல் பல் போன்றவற்றில் நகைகளை செய்து அசத்துகிறார்.
தாய்ப்பால், குழந்தையின் முடி, தொப்புள் கொடி என குழந்தையினுடைய அத்தனை நினைவுகளையும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள் முகநூல் மூலமாக பிரீத்தியை அணுகி நகைகளாக செய்து வாங்கிக் கொள்கிறார்கள்.