முகப் பராமரிப்பு

உங்களுக்குதான் இந்த விஷயம் கோடைக் காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்..!!

கோடைக் காலத்தில் சருமத்தின் நிறம் கருமையாகி, பொலிவிழந்து காணப்படும். கூடவே பிம்பிள் வர ஆரம்பிக்கும். கோடையில் முருவத்தை முறையாக பராமரித்து வந்தால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.
4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் வெயில்படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது.

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறி, சருமம் கருமை அடைவதை தடுக்கும்.
முகத்தின் கருமையை போக்க அரைத்த அன்னாசி பழம், திராட்சை விதை ஆயில், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகத்தில் ஏற்படும் பிம்பிளை போக்க 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், புதினா, துளசி இலைகள் சேர்த்து கலந்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வெப்பம் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு…!

nathan

இளமையான சருமம் பெற இந்த 5 எளிய ஃபேஸியல் மாஸ்க் ட்ரை பண்ணுங்க !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை விரட்டுவது எப்படி தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சரும சுருக்கத்தை தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

nathan

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

மழைக்காலத்தில் சருமம் அழகா இருக்கணுமா?

nathan