28.9 C
Chennai
Monday, May 20, 2024
625.500.560.350.160.300.053.800.900. 2
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை விரட்டுவது எப்படி தெரியுமா?

கரும்புள்ளிகள் என்பது கருப்பு எண்ணெய் கட்டிகள் ஆகும். இது சருமத்தின் ஆழத்தில் சென்று முகத்தில் கருப்பு திட்டுகளாக மாறுகின்றன.

இவை, ஒருவகை பருக்கள் ஆகும். சருமத்துளைகள் அடைப்பு மற்றும் அதிகரித்த எண்ணெய் சுரப்பு போன்றவற்றின் காரணமாக கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.

கரும்புள்ளிகளை புறக்கணிப்பதால் என்னவாகிறது என்றால் பருக்கள் தோன்றுகின்றன.

காரணங்கள்
எண்ணெய் பசை சருமம் அல்லது கலவையான சருமம்

இந்த வகை சருமத்தில் துளைகள் எளிதில் அடைக்கப்படுகின்றன. இதனால் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.

சருமத்துளைகள் அடைப்பு

மோசமான சரும பராமரிப்பு அல்லது ஒழுங்கற்ற முறையில் சருமத்தை சுத்தம் செய்வது போன்றவற்றின் காரணமாக சருமத்தில் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதன் காரணமாக துளைகள் அடைக்கப்படுகின்றன.

மோசமான சரும பராமரிப்பு

எண்ணெய் சார்ந்த பொருட்கள் அல்லது க்ரீம்களை அதிக அளவு பயன்படுத்துவதால் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.

ஹார்மோன் மாற்றங்கள்

ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக எண்ணெய் சுரப்பிகள் அதிக சீபம் உற்பத்தி செய்வதால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. மேலும் மன அழுத்தம் காரணமாகவும் இந்த நிலை உண்டாகலாம்.

கரும்புள்ளிகளுக்கான சிகிச்சை

 

  • கரும்புள்ளிகள் உள்ளவர்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் எக்ஸ்போலியேட் செய்வதை கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
  • எக்ஸ்போலியேட் செய்வதற்கான க்ரீம் மற்றும் ஜெல் உபயோகிக்க பாதுகாப்பானவை மற்றும் இவை மருத்துவ பரிந்துரை இல்லாமலும் கடைகளில் வழங்கப்படுகிறது. ஆனால் அதிகமான பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.
  • கரும்புள்ளிகளை நீக்குவதற்கான பட்டையில் க்ளு சேர்த்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிது நேரம் வைத்துவிட்டு சற்று நேரம் கழித்து அதனை எடுத்து விடுவதால் அவற்றுடன் சேர்த்து கரும்புள்ளிகளும் வந்துவிடும்.
  • கரும்புள்ளிகளை நீங்கள் தானாகவே நீக்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கான சுகாதார நிபுணர்கள் மூலம் அவற்றை நீக்கலாம். இதனால் தழும்புகள் தோன்றுவது தவிர்க்கப்படும்.
  • தோல் மருத்துவர்கள் ட்ரிடினோயின் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இவை இறந்த சரும அணுக்களை வெளியேற்றுகிறது. இருந்தாலும் இவற்றில் சில பக்க விளைவுகள் உள்ளன.
  • ஸ்கின் பில் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த தொடங்கிய ஆரம்ப நாட்களில் சருமம் சுத்தமாக தோன்றாவிட்டாலும் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். சருமமும் தூய்மையாக இருக்கும்.

 

கரும்புள்ளிகளை போக்குவதற்கான வீட்டு தீர்வுகள்

முகத்திற்கு மென்மையாக ஸ்கரப் செய்து பிறகு மென்மையாக மசாஜ் செய்வதால் கரும்புள்ளிகள் நீக்கப்படலாம்.

இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், தேன், ஒரு சிட்டிகை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தேய்க்கலாம்.

மூலிகைகள் மூலம் உங்கள் சரும அழகை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் லாவண்டர், எலுமிச்சை தோல் , புதினா இலை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து அதனை முகத்தில் தடவலாம். இதனால் சருமத்தின் எண்ணெய்த் தன்மை மற்றும் கரும்புள்ளிகள் கட்டுப்படுத்தப்படும்.

கரும்புள்ளிகளை தடுப்பது எப்படி?

வழக்கமான சரும பராமரிப்பு மற்றும் சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்றுவதால் கரும்புள்ளிகள் தடுக்கப்படும்.

ஸ்க்ரப்பிங் ஜெல் மற்றும் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது போன்றவை சிறந்த முறையில் கரும்புள்ளிகளை போக்குவதற்கான வழிகளாகும்.

Related posts

ஃபேஸ் மாஸ்க் போடும் முன் கவனிக்க வேண்டியவை

nathan

beauty tips.. முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் ஜொலிக்க ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் அற்புத மருத்துவம்..

nathan

கரும்புள்ளிகள் நீக்குவதற்கு எளிய DIY முட்டை முகமூடி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

சில அழகு டிப்ஸ் !! அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு..

nathan

உங்க முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கிறதா?

nathan

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்

nathan

தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

nathan

சூப்பர் டிப்ஸ்! மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்…

nathan