மலர்மருத்துவம் என்பது நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மென்மையான மலரான ரோஜா மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஆயுர்வேதத்தில் இதயத்தைப் பலப்படுத்தவும், ஆண்மை பெருக்கியாகவும், மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும் ரோஜா பயன்படுத்தப்படு கிறது.
ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதை எப்படி தயாரிப்பது என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு அதன் பயன்களைப் பார்க்கலாம்.
குல்கந்தின் பயன்கள்:
உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கும் இயற்கை குளிர்ச்சி மருந்தாக குல்கந்து செயல்படுகிறது.
வயிற்றுப்புண், குடல் பிரச்னை, குடல் புண், வாய்ப்புண் ணால் எரிச்சல், வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு குல்கந்து சிறந்த நிவாரணம்.
வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களைத் தூண்டி சீராக இயங்கவைத்து பசியை தூண்டுவதிலும் குல்கந்துக்கு முக்கியபங்குண்டு. மலச்சிக் கல் பிரச்னை இருப்பவர்கள் குல்கந்து தொடர்ந்து எடுத்து வந்தால் இரண்டு வாரங்களில் நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும். உடலில் பித்த நீர் சுரப் பின் அளவை சீராக்க செய்வதால் பித்தப்பை பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் குல்கந்து சிறந்த மருந்து.
மாதவிடாய்காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கு,அடி வயிறு வலி பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்கள் குல்கந்து சாப்பிட்டால் இந்தப் பிரச்னைகள் அடியோடு நீங்கிவிடும். அதிக வெள்ளைப்படுதல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
நம் ஆரோக்யத்தின் அடிப்படையே ஆரோக்யமான இதயம் தான், அதை சீராக இயங்கவைக்ககூடிய உணவு வகைகளைக் காலமின்மையால் உரிய முறையில் நம்மால் எடுக்க முடிவதில்லை என்பதே உண்மை. ஆனால் இதயம் சம்பந்தமான நோய்களை அண்டவே விடாமல் பாதுகாக்கும் அர ணாக குல்கந்து இருக்கிறது.
ரோஜாஇதழ்களில் இருக்கும் எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிக்கிறது என்கிறார்கள். பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்கள் குல் கந்தை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து குறைபாடுகள் சரிசெய்யப்படுகிறது.
சருமத்திலிருக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக குல்கந்து விளங்குகிறது. சிலருக்கு இளவயதிலேயே சருமத்தில் சுருக்கங் கள் உண்டாகி வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும். சரும சுருக்கங்களை நீக்கி பொலிவாக வைத்திருக்க குல்கந்து உதவுகிறது.முகப்பருக்கள், பருக்களால் உண்டான தழும்புகள் கூட நாளடைவில் மறையத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் துர்நாற்றப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு இது.
குல்கந்து தயாரிக்கும் முறை:
தரமான ஃப்ரஷ்ஷான சிவந்த ரோஜாக்களிலின் இதழ்களை எடுத்து நீரில் அலசி ஈரம் போக நிழலில் உலர்த்தி வைக்கவும். மொத்த இதழ்களின் எடைக்கு ஏற்ப கற்கண்டை மூன்று பங்கு சேர்த்து உரலில் சிறிது சிறிதாக இட்டு நன்றாக இடிக்கவும். இரண்டும் மைய கலந்து ஜாம் போன்ற பதத்துக்கு வரும். இதைக் கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் தேவைக்கேற்ப வெள்ளரி விதை, கசகசாவை சேர்த்து வைக்கவும். ஒவ்வொரு முறையும் நன்கு கிளறி எடுத்து பயன்படுத்தவும்.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 2 டீஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பயன்கள் பல மடங்கு கிடைக்கும்.
எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கும் மருத்துவக் குணமிக்க குல்கந்தை இனி நீங்களே தயாரிப்பீர்கள்தானே…
newstm.in