29.2 C
Chennai
Saturday, Jul 5, 2025
be4be10f23cbad
அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள் முகப்பருவை போக்க இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.

* கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ வராது.
be4be10f23cbad
* எலுமிச்சை சாறில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால், ஆக்னியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். நேரடியாக எலுமிச்சை சாறை முகத்தில் போட கூடாது. மற்ற பொருட்களோடு சேர்த்துதான் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். யோகர்டை நன்றாக வடிகட்டி கெட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கெட்டி யோகர்ட் அல்லது தயிர். அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மாதுளை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக போடலாம். 30 நிமிடங்கள் கழித்து வெறும் நீரில் கழுவலாம்.

* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

* ஜாதிக்காயை சிறிது ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள். அதேபோல சந்தன கட்டையை ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.

Related posts

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

காதை மிளிர வைப்பது எப்படி?

nathan

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan

கண்ணனின் திருமணத்தினால் ஏற்பட்ட பிரிவு! விறுவிறுப்பான ப்ரொமோ

nathan

பிகினி உடையில் போட்டில் புட் போர்ட் அடித்த காஜல் அகர்வால்

nathan

சூப்பர் டிப்ஸ்.. பிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…!

nathan

இந்த பேக் போட்டு பாருங்க! கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாகணுமா!

nathan