27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
342b953c45
ஆரோக்கிய உணவு

முயன்று பாருங்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.

இதை நிவர்த்தி செய்யவும் ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிடால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டல் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும்.
342b953c45
இளைப்பு நோயைக் குணப்படுத்தும். வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

Related posts

சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

nathan

ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..

nathan

வயதாவதை தள்ளிப்போடும் இந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வெயிட் போடும் என்று ஒதுக்கிய இந்த சக்தி வாயந்த உணவு பொருள் ஒரே மாசத்துல 20 கிலோ எடையை குறைக்குமாம்!

nathan

நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் நார்ச்சத்து நிறைந்த சிவப்பரிசி ரொட்டி! அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்கள் கவனத்துக்கு ஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க!

nathan

உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

nathan

ரெட் வைன் சோப் – red wine soap benefits in tamil

nathan

வயிற்றில் ஏற்பட்டு இருக்கும் கற்கள், புண்கள், கட்டிகள் பிரச்சனை குணமாகும். மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு கேரட் சாறை குடிக்கலாம்.

nathan