31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

ஆர்கானிக் முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்யலாம். இந்த பவுடர் தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும்.

ஃபேஸ்வாஷ் பவுடர்

பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
ஓட்ஸ் பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைமாவு – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கிரீன் டீ ஃபைன் பவுடர் – 1 1/2 டீஸ்பூன்

மேலே கூறப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம். இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

இந்த ஃபேஸ் வாஷ் பவுடர் முகத்தை பிரகாசமாக மாறும். முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் நீங்கும். காம்ப்ளக்‌ஷன் இயற்கையாகவே அதிகரிக்கும்.

அரிசி மாவு – அரை கப்
பச்சை பயறு மாவு – அரை கப்
கடலைமாவு – அரை கப்
ஓட்ஸ் பவுடர் – அரை கப்

இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம். சருமத்தில் உள்ள கருத்திட்டுக்கள் நீங்கும். பருக்களின் வடு நீங்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும். சருமம் முழுவதும் ஒரே பளிச் நிறத்தைக் கொடுக்கும். சீரான ஸ்கின் டோன் கிடைக்கும். சருமம் மிருதுவாகும்.

Related posts

குறைபிரசவ குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனைமுறை தாய்ப்பால் தர வேண்டும்?

nathan

பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும நிறம் சீராக இருக்க இதை செய்யலாம்…

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

sangika

முக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்களை போக்க…..

sangika

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

விடிய விடிய தீ மூட்டவிட்ட பிக்பாஸ்! அண்ணாச்சியை பழி தீர்த்த இசைவாணி…

nathan