26.7 C
Chennai
Wednesday, Nov 20, 2024
156013563d0d4afa87d881f33088bf8f5171afda0 1877265759
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அற்புத மருத்துவ பயன்களை கொண்ட கோரைக்கிழங்கு!

கோரைக்கிழங்கு பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். இது ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு அரை தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.

கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும். இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும். கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும். கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும். பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

156013563d0d4afa87d881f33088bf8f5171afda0 1877265759

Related posts

ருசியான பஞ்சு போல் இட்லி வேண்டுமா?

nathan

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

உடலுக்கு ஆரோக்கியமானது முட்டையின் வெள்ளை கருவா? மஞ்சள் கருவா?

nathan

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

nathan

சூப்பரான பட்டர் சிக்கன் ரெசிபி

nathan

சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய பன்னீர் பீட்சா செய்முறை!

nathan