நாம் தினமும் சுவாசிக்கும் காற்றானது பெருமளவில் நம்மை பாதித்து வருகிறது. அதற்கு காரணமாக நாம் காடுகளை அளித்ததே., காடுகளை அளித்ததனால் ஏற்படும் பிரச்சனைகளை பல சமயங்களில் எடுத்து கூறி காடுகளின் அழிவிற்கு எதிராக போராடினாலும்., அன்று செய்த செயலுக்கு இன்று தான் அதன் பலனை அனுபவித்து வருகிறோம்.
பெரு நகரங்களில் உள்ள முக்கிய பிரச்சனையாக இருப்பதில் காற்று மாசுபடும் ஒன்றுதான். அந்த வகையில் நமது சொந்த ஊர்களுக்கு அல்லது கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு உள்ள சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது உடலில் உண்டாகும் மாற்றத்தையும்., பெரு நகரங்களில் காற்று மாசுபட்டால் மூச்சு காற்றை கூட சுவாசிக்க இயலாமல் கைக்குட்டையில் மூடிக்கொண்டு செல்லும் போதுதான் காற்றின் அருமை பலருக்கு தெரிகிறது.
காற்று மாசுபாட்டின் காரணமாக குறை பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில்., மாசடைந்த காற்றை சிறிது நேரம் சுவாசித்தலும் அதன் மூலம் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலமாக கருச்சிதைவு., குறை மாத பிரசவம் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனை ஏற்படலாம் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைடு வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் பட்சத்தில் அதிகளவிலான உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை குறித்த ஆய்வுகளை சுமார் 28 வயதுடைய 1300 பெண்களிடம் நடத்திய போது இந்த தகவல் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சனைகளுக்கு பெண்கள் முகமூடி அணிந்து செல்லுவது நல்லது என்றும்., விரைவில் இதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.