30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்
பொதுவாக ஒருவருக்கு ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

இதற்கு என்னதான் ஆங்கில வைத்தியம் இருந்தாலும் இயற்கை வைத்தியமே சிறந்தது என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஆஸ்துமா பிரச்சினையிலிருந்து விடுபட சிவப்பு வெங்காயம் பெரிதும் உதவி புரிகின்றது.

சிவப்பு வெங்காயத்தில் வைட்டமின் சி, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் அடங்கியுள்ளன.

வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட், க்யூயர்சிடின், ஆந்தோசையனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை சரிசெய்வதாக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட சிவப்பு வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 300-350 கிராம்
எலுமிச்சை – 2
தண்ணீர் – 5-6 டம்ளர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து உருக வைக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட வேண்டும்.

அடுத்து அதில் நீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீர் கொதித்து நன்கு சுண்டிய நிலையில், அடுப்பை அணைத்து கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அதில் எலுமிச்சைகளைப் பிழித்து, தேன் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

பெரியவர்களுக்கு ஆஸ்துமா என்றால், ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

அதுவே குழந்தைகளுக்கு என்றால் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்

Related posts

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா இரவில் குழந்தைப் போல தூக்கத்தைப் பெற உதவும் அற்புத பானங்கள்!

nathan

புற்றுநோய் தவிர்க்கும் வழிமுறைகள்!

nathan

செக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்

nathan

அகத்திக்கீரை

nathan

அதிகம் தூங்கினாலும் ஆபத்து!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

nathan

கிடுகிடுவென உங்கள் எடையினைக் குறைக்கலாம்! இரவு மட்டும் இதை குடிங்க…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…முருங்கை பூவின் மருத்துவ மகிமை

nathan