6702 7334
ஆரோக்கிய உணவு

ருசியான சிக்கன் போண்டா செய்ய…!!

தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா – கால் கிலோ (எலும்பு நீக்கியது)
சின்ன வெங்காயம் – 50 கிராம்
போண்டா மாவு – 250 கிராம்
சிக்கன் மசாலா – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 2 கொத்து
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு
பொட்டுக் கடலை – 50 கிராம்
இஞ்சி – 2 சிறிய துண்டு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:

* எலும்பில்லா சிக்கனை கொத்தி (கைமா) வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியா சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெய்யில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும். சுவையான சிக்கன் போண்டா தயார்.6702 7334

Related posts

தெரிஞ்சிக்கங்க… இஞ்சியில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

nathan

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்!!!

nathan

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்…

nathan

செரிமானத்தை எளிதாக்கும் 8 உணவுகள்..!

nathan