28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
0.053.800.668.160.90
ஆரோக்கிய உணவு

7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? சூப்பர் டிப்ஸ்…

எலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் எலுமிச்சை குடித்து வந்தால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று என்பதைத் தெரிந்து குடிப்பது நல்லது.
ஊட்டச்சத்து நிபுணர்கள்

எலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்குள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள்.

நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.
பாலிபினைல்கள்

எலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.
எத்தனை முறை?

ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம். இன்னும் இதுபற்றிய பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சாப்பாட்டுக்குப் பின்

சாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழி.

நாம் யாருடனாவது பேசுகிற பொழுது, புதினா மௌத் பிரஷ்னரோ அல்லது சுவிங்கமோ வாயில் போட்டுக் கொள்வது உண்டு.

ஏனென்றால் அது நம்முடைய வாயிலிருந்து கெட்ட துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக.

நீங்கள் நன்றாக கவனித்தால் தெரிந்திருக்கும் நிறைய மௌத் பிரஷ்னர்கள் எலுமிச்சை எக்ஸ்டாக்டு சேர்க்கப்பட்டு இருக்கும். அதற்கு பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் எவ்வளவு புத்துணர்வாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.0.053.800.668.160.90

Related posts

உடல் எடையை குறைப்பதற்கு முதலில் தேவை ஆரோக்கியமான உணவு முறையாகும். உடல் எடையை குறைக்க இப்போது அதிக பிரபலமாகி வரும் ஒரு முறை பச்சை காய்கறிகள் ஜூஸாகும்.

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

மீண்டும் சூடேற்றக்கூடாத விஷமாக மாறக்கூடிய உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயம்…!!

nathan

ஏன் காலை 9 மணிக்கு முன் எப்போதுமே காபி குடிக்கக் கூடாது?

nathan

பெண்களின் ஹார்மோன்கள் அதிகரிக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

காலையில் வெல்லம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உடல்வலியை உடனே போக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

சூப்பரான கம்பு புட்டு

nathan