27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
21193561257c82aedccfe7ed63b98c531db4d7387
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…

துளசி இலையை ஆங்கிலத்தில் “ஹோலி பேசில்” என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை “மூலிகைகளின் ராணி” என்று வர்ணிக்கின்றனர்.

மேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். துளசி இவ்வளவு புனித தன்மையுடன் போற்றப்படுவதற்கு என்ன காரணம்?

21193561257c82aedccfe7ed63b98c531db4d7387

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி மகத்துவம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.

தற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. உங்கள் தினசரி வாழ்வில் துளசியை எந்த விதத்தில் பயன்படுத்தலாம்? இதனை அறிந்துக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். இதில் துளசியை அனுதினம் உங்கள் வீட்டில் பயன்படுத்த 7 வித குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
அழுத்த எதிர்ப்பி துளசி தேநீர்

துளசிக்கு அழுத்த எதிர்ப்பு தன்மை இருப்பதாக அறியப்படுகிறது. அதனால் இதனை தேநீராக தினமும் பருகி மகிழலாம். ஒரு அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட மூலிகையானது, ஆரோக்கியமான முறையில் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உடலின் பல்வேறு செயல்பாடுகளான ஹார்மோன் செயல்பாடுகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள், மூளை ரசாயனம் போன்றவற்றை சமநிலை செய்ய உதவுகிறது.

12439874407d92282a384547307e213cc83009796 928441915

உங்கள் உடல் செயல்பாடுகள் குறைந்து மனம் வேறு திசையில் பயணிக்கும் போது உங்கள் உடலை சமநிலைப் படுத்த இந்த பண்புகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் பதிலளிப்பதற்கு மாற்றாக கோபம் உண்டாகலாம்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
நன்மைகள்

ஒற்றைத் தலைவலி ஏற்படலாம், பசியுணர்வு குறைந்து போகலாம், ஒரு வாரத்திற்கான வேலை முழுவதும் கிடப்பில் போடப்படலாம். இந்த நேரத்தில் இந்த துளசி தேநீர் உங்களுக்கு சிறந்த நன்மையைக் கொடுக்கும். உடல், ரசாயனம், வளர்சிதை மற்றும் மனம் சார்ந்த அழுத்தங்களை உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையை துளசி நேரடியாக வழங்குகிறது.

துளசியின் அழுத்த எதிர்ப்பு தன்மையை உங்கள் உடல் பெற்றுக் கொள்ள, தினசரி இந்த தேநீரைப் பருகலாம் அல்லது அவ்வப்போது அழுத்தமான சூழ்நிலையை கடந்து வர இதனைப் பருகலாம். துளசி ஒரு சிறந்த நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், சேதமடைந்த நரம்பு மண்டலத்தை மீட்டெடுத்து உறுதிப்படுத்த துளசி உதவுகிறது.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி தேநீர் செய்யும் முறை

துளசியைக் கொண்டு தேநீர் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

. ஒரு கப் தண்ணீர்
. ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் காய்ந்த துளசி (அல்லது ஒரு கை நிறைய புதிதாக பறித்த துளசி இலைகள் அல்லது பூக்கள்)

செய்முறை

. ஒரு கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
. தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
. துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றவும்.
. பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்துக் கொள்ளவும்.
. சிறிது நேரம் அதாவது 15-20 நிமிடம் கழித்து, அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவும்.
. வடிகட்டிய துளசி நீரைப் பருகவும்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
வீட்டைப் பாதுகாக்கும் துளசி

சுமார் 5000 வருடங்களுக்கு மேலாக ஒரு புனிதமான செடியாக இந்தியர்களால் போற்றப்பட்டு வரும் துளசி ஒரு சக்தி மிகுந்த மூலிகை ஆகும். இதனை வீடுகளில் வளர்ப்பது மிகுந்த நன்மைத் தரும். இந்து மத பாரம்பரியத்தில் தினமும் துளசி பூஜை செய்யும் முறை உள்ளது. இப்படி தினமும் துளசி பூஜை செய்வதால், ஒருவர் வீட்டில் ஆற்றல் நிறைந்து காணப்படும்.

வீடு தூய்மையாக இருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்த்து பராமரித்து வருபவர்கள், தினமும் காலையில் செடிக்கு தண்ணீர் விட்டு, செடியின் முன் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, மணி அடித்து, தூப தீப ஆராதனை செய்து, மந்திரம் ஜெபிப்பார்கள்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
ஏன் வளர்க்கிறோம்?

துளசி போன்ற ஒரு செடியை வீட்டில் வளர்ப்பதால், இயற்கையின் படைப்பாற்றல் சக்தியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. துளசி செடியை உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் வளர்ப்பதால் அதனுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இந்த தொடர்பு உங்களுக்கு நன்மையைச் செய்யும். துளசி செடியை எளிய முறையில் வீட்டில் வளர்க்க முடியும். ஈரப்பதமான வெப்பநிலையில் வளரும் தன்மையுள்ள துளசி செடி, வறண்ட வெப்ப நிலையிலும் வெற்றிகரமாக வளர்கிறது. வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் துளசி செடியை வளர்க்க முடியும்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
நச்சு நீக்கி

துளசி புதினா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். பூ பூப்பதற்கான அறிகுறிகள் தோன்றியவுடன், இலைகளின் முதல் அடுக்கை கிள்ளி எடுத்து விடலாம். இதனால் அதிக இலைகள் உருவாகி, செடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும். துளசி விதைகளில் இருந்து செடி வளர்க்கும் முறையை அறிந்து அதனைப் பின்பற்றலாம்.

நீங்களும் அனுதினம் துளசியை பயன்படுத்த முடியும். நீங்கள் துளசியை தாயத்தாக கட்டிக் கொள்ள முடியும். வீட்டை பல நச்சுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மைக் கொண்ட துளசி, அதே விதத்தில் உடலில் இருக்கும் நச்சுகளிடம் இருந்து உடலை பாதுகாத்து ஆற்றலை அதிகரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. உங்கள் உடலையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் தன்மை துளசிக்கு உண்டு.

இரு கை நிறைய காய்ந்த துளசி இலைகள் அல்லது புதிதாக பறிக்க பட்ட துளசி இலைகள் இரண்டு கொத்து எடுத்து உங்கள் தொழுகை மேடையில் வைத்து மனமுவந்து பிரார்த்தனை செய்யவும். ஒரு சிறு துளி துளசியை ஒரு துணியில் வைத்துக் கட்டி, கழுத்தில் தாயத்துபோல் கட்டிக் கொள்ளலாம்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி மவுத்வாஷ்

பலவகை பற்பசைகளின் மூலப் பொருளாக துளசி இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் துளசியின் மிகப் பரந்த கிருமி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, துளசி ஒரு சிறந்த மவுத்வாஷ்ஷாக பயன்படுகிறது என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பற்கள் அழுகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பக்டீரியாவான ஸ்ட்ரெப்டோகோகுஸ் ம்யுடன்ஸ் என்ற பக்டீரியாவைக் குறைப்பதில் துளசி சாறு நல்ல தீர்வைத் தருவதாக ஒரு மருத்துவ பரிசோதனை விளக்குகிறது. தினமும் துளசியைக் கொண்டு வாய் கொப்பளிப்ப்பதால், பற்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் படிவது தடுக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

. ஒரு கை நிறைய புதிதாகப் பறித்த துளசி இலைகள் அல்லது 2 ஸ்பூன் அளவு காய்ந்த துளசி இலைகள்
. ஒரு கப் தண்ணீர்
. ஒரு ஸ்பூன் வோட்கா (தேவைப்பட்டால்)

செய்முறை

. ஒரு பாத்திரத்தில் துளசி இலைகளை வைத்துக் கொள்ளவும்.
. தண்ணீரைக் கொதிக்க வைத்து, துளசி இருக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அந்த துளசி சாறு நீரில் இறங்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
. இருபது நிமிடம் கழித்து அந்த நீரில் இருந்து துளசியை வடிகட்டி அந்த நீரை ஒரு ஜார் அல்லது பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
. அந்த நீர் அறை வெப்ப நிலைக்கு வரும்வரை காத்திருக்கவும்.
. வோட்கா சேர்ப்பதால் நான்கு முதல் ஐந்து நாட்கள் பிரிட்ஜில் வைத்து மவுத்வாஷ் கெடாமல் பாதுகாக்கலாம்.
. தினமும் 20-30 நொடிகள் இந்த மவுத்வாஷ் கொண்டு வாயைக் கழுவி கொப்பளித்து வரலாம்.
. பாட்டிலை மூடி வைத்து பிரிட்ஜில் வைக்கவும். வோட்கா சேர்க்காமல் தயாரிக்கும் மவுத்வாஷ் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரிட்ஜில் நன்றாக இருக்கும்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
மூளைக்கான ஒரு டானிக்

துளசி மனச்சோர்வு எதிர்ப்பியாகவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. பொதுவாக துளசி, ஒரு நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், நரம்பு மண்டலத்தை சமநிலைப் படுத்தவும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும் இந்த மூலிகை உதவுவதாக அறியப்படுவதால், நரம்பு திசுக்கள் வலிமை அடைவதாக நம்பப்படுகிறது. மனத்தெளிவை ஊக்குவிக்க துளசி தேநீரில் தேன் சேர்த்து பருகலாம்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசியுடன் நெய் மற்றும் தேன்

காய்ந்த துளசிப் பொடியுடன் ஒரு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன் கலந்து உட்கொள்வது பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒரு வழிமுறையாகும். இதனை தினமும் உட்கொள்ளலாம். துளசி மாத்திரையை உட்கொள்வதற்கு மாற்றாக இந்த முறையை பின்பற்றுவதால், துளசி இலைகள் நேரடியாக செரிமான பாதைக்கு கீழ் சென்று, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. துளசி இலையில் இருக்கும் வறண்ட தன்மை மற்றும் கசப்புத் தன்மையை குறைக்கும் விதத்தில் இதனோடு இருக்கும் நெய் மற்றும் தேன் இனிப்பு சுவையை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்

. அரை அபூன் அரைத்த துளசிப் பொடி
. ஒன்று அலல்து இரண்டு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன்

செய்முறை

. துளசிப் பொடியுடன் நெய், எண்ணெய் அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உங்கள் விருப்பம் மற்றும் சுவைக்கேற்ப நெய். எண்ணெய் அல்லது தேனின் அளவை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த துளசி விழுதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த துளசி தேன் சாற்றை கலந்து தயாரித்து நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
ப்ரெஷ்ஷான துளசி சாறு

புதிதாகப் பறித்த துளசி இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துப் பருகலாம். இந்த சுவை மிகுந்த புத்துணர்ச்சி தரும் பானம், நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. பாரம்பரியமாக, இந்த ஜூஸில் தேன் கலந்து, காய்ச்சல், சளி, மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது. துளசி ஜூஸ் பருகுவதால், உடலின் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு சமநிலை தருவதன் மூலம் மன அழுத்தத்தை உடல் எதிர்கொள்ள உதவும். சருமத்தில் பூஞ்சை தொற்று பாதிப்புகளுக்கு மருந்தாகவும் துளசி சாற்றைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

. அரை கப் தண்ணீர்
. ஒரு கப் புதிதாகப் பறித்த துளசி இலைகள்

செய்முறை

. துளசி இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
. துளசியுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
. அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து, வடிகட்டியால் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
. இந்த துளசி ஜூஸ் பருகுவதற்கு சுவையாக இருக்கும். இதனை தினமும் பருகலாம்.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி இலைகளை சாப்பிடுவது

இது மிகவும் எளிமையான முறையாகும். உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் துளசி செடியை நீங்கள் வளர்த்தால் உங்களுக்கு நிறைய துளசி இலைகள் கிடைக்கும். தினமும் துளசி இலையைப் பறித்து உண்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் நான்கு முதல் ஐந்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால், நோயெதிர்ப்பு மண்டலம் அதிக வலிமை அடைகிறது.

துளசி இலைகளை வாயில் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனை விழுங்குவதை விட, மென்று சாப்பிடுவது மட்டுமே நன்மை தரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி மென்று சாப்பிடுவதால் தாவர ஊட்டச்சத்துகள் வெளியாகிறது.

தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
தினமும் பயன்படுத்த நீங்கள் தயாரா?

உங்கள் தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியமான முன்னேற்றத்தைத் தரும் ஒரு எளிய வழி துளசி. இது ஒரு பழம்பெரும் மூலிகை என்றாலும், சக்தி மிக்க மூலிகை. எல்லா உடலுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும் இந்த துளசி, பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

துளசியை தேநீராகப் பருகலாம். தேன் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளலாம், உங்கள் வீட்டில் வளர்க்கலாம். எது எப்படி இருந்தாலும், பல அற்புதங்களைச் செய்யும் இந்த துளசியை ஏதாவது ஒரு வடிவத்தில் உங்கள் உடலுக்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

source: boldsky.com

Related posts

உங்க குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சூப்பரா பலன் தரும்!!

nathan

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்..

nathan

டெங்குக் காய்ச்சலிலிருந்து நம்மை எளிதாகப் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் இத படிங்க!…

sangika

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள் ?

nathan

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

nathan

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

எச்சரிக்கை! மூடநம்பிக்கைகாக மாதவிடாய்-ஐ தள்ளி போடுவதா?

nathan