dryfigssoakedinoliveoil 1544249505
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! ஆண்மை குறைவை போக்க, அத்திப்பழத்தை இந்த எண்ணெய்யில் ஊற வைத்த சாப்பிடுங்கள்..!

ஒவ்வொரு உணவும் நமது உடலில் இருக்க கூடிய அல்லது வரக்கூடிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை தான். நாம் அவற்றை எடுத்து கொள்ளும் தன்மையை பொருத்தே இந்த உணவுகளின் ஆற்றல் பல மடங்காக கூடுகிறது. அந்த வகையில் அத்திப்பழமும் ஆலிவ் எண்ணெய்யும் சிறந்த உணவுகளாக உள்ளன.

இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்குமாம். இது எப்படி சாத்தியம் என்பதையும், இதனை தயாரிக்கும் முறையையும், எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.

அற்புத அத்திப்பழம்..! அத்திபழத்தில் பல வித நன்மைகள் இருப்பது நமக்கு நன்கு தெரியும். வயிற்று பிரச்சினை முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் இந்த சிறிய பழம் அருமையான முறையில் உதவுகிறது. நாம் தினமும் அத்திப்பழம் ஒன்று சாப்பிட்டு வந்தால், நமக்கு கிடைக்கும் பலன் ஏராளம்

ஆலிவ் எப்படி..? மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் மிக சிறந்தது. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நோய்கள் நம்மை அண்டாமல் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம். ரத்த அழுத்தம் முதல் இதய பிரச்சினைகள் வரை அனைத்தையும் இது சரி செய்ய வல்லது.

அத்தியும்… ஆலிவும்..! இரு பொருட்கள் சேர்வதால் அதன் தாக்கம் அறிவியல் பூர்வமாகவே அதிகமாக தான் இருக்கும். இது சாத்திய படும்படி இந்த ஜோடி உள்ளது. நீங்கள் இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் ஆண்மை குறைவு, குடல் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றிற்கும் தீர்வு கிடைக்குமாம்.

பலன் #1 நீங்கள் இந்த 40 நாட்கள் ஊற வைத்த அத்திப்பழ கலவையை சாப்பிடுவதால் உடலில் எல்லா இடங்களிலும் உள்ள பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிந்து விடும். மேலும், நோய்கள் எதுவும் உங்களை அண்டாமல் பார்த்து கொள்ளும் தன்மை இந்த ஆலிவ் அத்திக்கு உள்ளதாம்.

பலன் #2 உடல் பருமனால் அவதிப்படுவோர்க்கு இந்த கலவை சிறந்த மருந்தாக இருக்கும். நீங்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக விரைவாக குறைந்து விடும். இதற்கு காரணம் அத்தியில் உள்ள நார்சத்து தான்.

பலன் #3 ஆண்மை குறைவு பிரச்சினையால் இன்று பல ஆண்கள் மன உளைச்சலுடன் இருக்கின்றனர். இதனை குணப்படுத்த ஆலிவ் அத்தி கலவை நன்கு உதவும். இதற்கு முழு காரணம் இவற்றில் உள்ள சோடியம், கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் தான்.

பலன் #4 ஆண்களுக்கு பலன் தருவது போல, பெண்களுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. குறிப்பாக கருமுட்டை வளர்ச்சி குறைவாக உள்ள பெண்களுக்கு இது உதவும். கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

தயாரிக்க தேவையானவை… இந்த முக்கிய கலவையை செய்ய சில பொருட்கள் தேவைப்படுகிறது. கண்ணாடி ஜாடி 1 ஆலிவ் எண்ணெய் உலர்ந்த அத்திப்பழம் 40

தயாரிக்கும் முறை முதலில் ஜாடியில் அத்திப்பழ துண்டை சேர்த்து கொள்ளவும். பிறகு ஜாடி நிறையும் வரை ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை 40 நாட்கள் ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு சாப்பிடுவதற்கு முன்பாக 1 பழத்தை மட்டும் எடுத்து சாப்பிடவும்.

பலன் #5 உடலில் ரத்த சோகை, சீரற்ற ரத்த ஓட்டம் போன்ற நோய்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய இவை உதவுகிறது. குறிப்பாக இவை ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்து, ரத்தம் சார்ந்த கோளாறுகள் வராதபடி பார்த்து கொள்கிறது.

பலன் #6 இந்த் கலவையில் ஒமேகா 3 மாறும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகையினால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து விடுகிறது. எனவே, இதய நோய்கள் வராமல் இவை காக்கிறது

பலன் #7 எதை சாப்பிட்டாலும் சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பவர்களுக்கு இந்த அத்தி ஆலிவ் கலவை நன்கு உதவுகிறது. அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

பலன் #8 நுரையீரல் பிரச்சினைகள் பலவற்றை இந்த கலவை சரி செய்ய உதவுகிறது. ஆஸ்துமா, மூச்சு திணறல், மூச்சுக்குழாய் அழற்சி, போன்ற சுவாச கோளாறுகளையும் இவை எளிதில் தீர்த்து விடுகிறது.dryfigssoakedinoliveoil 1544249505

Related posts

மூட்டு வலி, முதுகு வலி, உடல் சோர்வில் இருந்து விடுதலை

nathan

திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெரியுமா?

nathan

பெண்களுக்கு எந்த வயதில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் ?

nathan

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்!!!

nathan

உஷார்… கர்ப்பத்தின் போது பாராசிட்டமால் எடுக்கப் போறீங்களா?

nathan

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan

அவசியம் படிக்க.. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

nathan