29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
94d8ee835ef6de961e55efc95fe8e49d
ஆரோக்கிய உணவு

திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….!

பழங்களில் நிறையப் பேர் விரும்பிச் சாப்பிடும் ஓர் பழம்தான் திராட்சை, இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும் இப்பழத்தை சாறு எடுத்து குடித்தால் இப்பழத்தின் முழுச் சத்துக்களையும் பெறலாம். அதில் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். திராட்சை சாறு இரத்த அழுத்தத்தைத் கட்டுபடுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவைதான் காரணம். மேலும் திராட்சை சாறு இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும். தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையை சாறு எடுத்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

திராட்சை சாறை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. திராட்சை சாறு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

94d8ee835ef6de961e55efc95fe8e49dஅதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கபடும் சாறுக் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும். திராட்சை சாறு நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு உடல் எடை குறையும். திராட்சை சாறு சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திராட்சை சாறு இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Related posts

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கா! தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாவு புளித்துவிட்டதா?.. புளிப்பை மட்டும் தனியாக பிரிக்க இதை மட்டுமே செய்யுங்கள்..

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில சிறப்பான காலை உணவுகள்!

nathan

நோய்களைத் தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14 உணவுகள்

nathan

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

nathan