பனஞ்சர்க்கரை பனைமரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இது பற்றி அறியும் முன் இது உருவாக காரணமாக இருக்கும் பனைமரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
பனை என்பது ஒரு மரம் மட்டுமல்ல. தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்விலும், வரலாற்றிலும், பொருளியலில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த சிறப்புக்குரியது.
மேலும், தமிழின் பெருமைக்குரிய செய்யுள்கள் அனைத்தும் பனை ஓலைகளில் தான் எழுதப்பட்டுள்ளது. இப்படி போற்றி புகழும் அளவிற்கு பனையினால் நமக்கு என்ன பயன்? அதற்கான காரணம் என்ன?
பனையின் பயன்கள் :
பனைமரம் நடவு செய்யாமல் வளரும் ஒன்று. பனைமரத்தின் நிழல் மிக குளிர்ச்சியானது.
இதன் அனைத்து பாகங்களும் நமக்கு பயன்தரக்கூடியது. கள்ளு, தெளுவு, நுங்கு, பனம்பழம், கீத்துமட்டை, விறகு என அனைத்து வகைகளிலும் நமக்கு பயன்படுகிறது.
தமிழகத்தை உலுக்கி சென்ற கஜா புயலாகட்டும், இதற்கு முன் வந்த புயல்களாகட்டும் எந்த புயல்களிலும் பனைமரங்கள் சாய்ந்ததாக கேள்விப்பட்டிருக்கமாட்டோம். காரணம் பனைமரம் அந்த அளவிற்கு உறுதியானது. பனைமரங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதனாலோ என்னவோ நாம் இன்று இயற்கை சீற்றங்களுக்கு உள்ளாகி உள்ளோம். புயல்களை நாம் பாதிப்பில்லாமல் கடக்க பனைமரம் நமக்கு உதவும்.
இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த பனைமரத்தின் பனைநீரிலிருந்து கிடைப்பது தான் பனஞ்சர்க்கரை. பனைமரத்தின் பயன்கள் எப்படி அளவில்லாததோ அதுபோல அதன் மூலம் கிடைக்கும் பொருட்களும் அளவில்லாத நன்மைகளை கொண்டது.
பனஞ்சர்க்கரையின் நன்மைகள் :
பனஞ்சர்க்கரையில் அதிக அளவிலான இரும்புச்சத்தும், கால்சியமும் இருப்பதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வைட்டமின் ‘பி” மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த பனஞ்சர்க்கரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுவதால் பருவமடைந்த பெண்களுக்கு உளுந்துடன் பனஞ்சர்க்கரை சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுப்பதனால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
குப்பைமேனி கீரையுடன் பனஞ்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல், நீண்டநாள் சளி தொல்லை நீங்கும்.
சீரகத்துடன், பனஞ்சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
பனஞ்சர்க்கரையுடன், ஓமம் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதத்துடன் பனஞ்சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்கும்.
குழந்தையின்மைக்கு நல்ல இயற்கை மருந்து பனஞ்சர்க்கரை.
இதுமட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் பனஞ்சர்க்கரையில் நிறைந்துள்ளது