ஃபேட் டயட் (பசியற்ற உணவு) முறைகள் நமது உடல் எடையை வெகுவாக குறைக்க பயன்படுகிறது. இந்த டயட் முறைகளில் சில தேவையற்ற உணவுகளை மட்டும் தவிர்ப்பதும் அல்லது சில உணவு வகைகளை தவிர்ப்பதும், சில நேரங்களில் மட்டும் உணவுகளை தவிர்ப்பதும் செய்து வருகிறார்கள்.
அதன்படி பார்த்தால் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சேர்க்கிறார்கள். உடல் எடையை வெகு சீக்கிரமாக குறைக்க ஃபேட் டயட் சிறந்தது. ஆனால் ஒரு சிறிய பிரச்சினை இதை நீங்கள் ஃப்லோ பண்ணுவதை இடையிலேயே நிறுத்தி விட்டால் உடல் எடை மறுபடியும் ஏறி விடும்.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா? மெரிடேரியன் டயட்
இந்த டயட் முறையில் மத்திய தரைக்கடல் உணவுகளான கடல் உணவுகள், நட்ஸ், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், ஆலிவ் ஆயில், வொயின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த டயட்டில் அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இந்த டயட்டுடன் உடற்பயிற்சி செய்து 6 மாதங்கள் பின்பற்றி வந்தால் உடல் எடை குறைவது சாத்தியம். கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், மார்பக புற்று நோய், பர்கின்சர் நோய், அல்சீமர் நோய் வராமல் தடுக்கிறது.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
செமி வெஜிட்டேரியன் டயட்
இந்த டயட் முறையில் சிறிய அளவு மாமிசம், சிக்கன் மற்றும் மீன் சேர்க்கப்படுகிறது. இந்த டயட் நான்வெஜ் பிரியர்களுக்கு சிறந்தது. மாமிசம் சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடையை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ளலாம். இந்த டயட்டிற்கு என்று எந்த விதிமுறையும் கலோரி கணக்கும் கிடையாது. இந்த டயட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், டைப் 2 டயாபெட்டீஸ் வருவதை தடுக்கவும் பயன்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
பசியை ஆற்றும் செளத் பீச் டயட்
இந்த டயட் உங்கள் பசியை ஆற்ற சிறந்தது. இது உங்கள் பசியை குறைப்பதால் அதன் மூலம் உடல் எடையையும் குறைத்து விடும். கெட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து புரோட்டீன், குறைந்த கொழுப்பு பால் பொருட்கள் மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 3 படிநிலைகள் உள்ளன.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
எப்படி சாப்பிட வேண்டும்?
1 நிலை :14 நாட்கள் (அதிக புரோட்டீன், ஸ்டார்ச் இல்லாத காய்கறிகள், சிறிய அளவில் கொழுப்பு உணவுகள், பருப்பு வகைகள் கொண்டு 3 வேளையும் சாப்பாடு எடுத்துக் கொள்ள வேண்டும்)
2 நிலை :15 நாட்கள் (முதல் நிலையில் சொன்ன உணவுகளுடன் பழங்கள் மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் உணவுகளை சேர்த்தல்.
நிலை 3: இந்த நிலையில் ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். கடுமையான டயட் இங்கே கிடையாது. உங்கள் எடை இன்னும் குறையவில்லை என்றால் 1-2 வாரங்கள் நிலை 1யை ஃபாலோ செய்து விட்டு கூட நிலை 3க்கு செல்லலாம். இது வயிற்று பகுதியில் உள்ள தொப்பையை குறைக்க பயன்படுகிறது.
இந்த டயட் நமது மெட்டா பாலிசத்தை மாற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் 30-30-40 விதி பின்பற்றப்படுகிறது. 30% கலோரிகள் புரோட்டீன் உணவுகள், 30% கொழுப்பு உணவுகள், 40% கார்போஹைட்ரேட் உணவுகள். 3 வேளையாக சாப்பிடுவதை 5 வேளையாக சாப்பிடுவது நல்லது.
குறிப்பு : இதய நோயாளிகள், டயாபெட்டிக் நோயாளிகள் இந்த டயட்டை ஃபாலோ பண்ண வேண்டாம்.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
எடையை பராமரிக்கும் பேலியோ டயட்
இந்த டயட் முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிரட், சர்க்கரை, பால் பொருட்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 15% காய்கறிகளையும், 35-45% ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைத்தல், இரத்த அழுத்தத்தை மேம்படுத்துதல், ட்ரைகிளிசரைடு குறைத்தல், பசியை சமநிலைப்படுத்த இந்த டயட் உதவுகிறது.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
ஆற்றலை தரும் கீட்டோஜெனிக் டயட்
இந்த டயட் முறையில் கீட்டோஸ் மூலம் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இங்கே உணவுகள் சுகராக மாறாமல் கீட்டோஸாக மாறுவதால் உடல் எடை வெகுவாக குறைந்து விடும். உடல் ஆற்றலும் கிடைக்கிறது. இது ஒரு குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமான திட்டமாகும். அதிக சர்க்கரை சத்துள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
என்ன சாப்பிடக் கூடாது?
அதாவது அரிசி, பிரட், பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை வேண்டாம். இது பசி மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், டைப் 2 டயாபெட்டீஸ் கட்டுப்படுத்துதல், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குறைத்தல் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.
2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?
முட்டை கோசு சூப்
தண்ணீர் சத்தை குறைத்து உடல் எடையை குறைக்கும் முட்டை கோசு சூப்
இதுவும் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும் டயட் முறை. இதற்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஓரே ஒரு சூப்பை கொண்டு உடல் எடையை குறைத்து அசத்தலாம். இந்த 7 நாட்கள் டயட் முறையில் முட்டை கோசு சூப்பை மட்டும் எடுத்து வர வேண்டும். பழங்கள் மற்றும் சூப், மற்ற 5 நாட்கள் கொஞ்சம் மாட்டிறைச்சி என்று இப்படி சாப்பிட்டு வரலாம்.
7 வது நாள் இறுதியில் 2 வாரங்கள் ஒய்வெடுத்து விட்டு மீண்டும் இந்த டயட் திட்டத்தை ஆரம்பிக்கலாம். இது நமது உடலில் உள்ள தேவையற்ற தண்ணீர் சத்தை போக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. எடை குறைந்த பிறகு எப்பயும் போல் நீங்கள் சாப்பிடலாம். ஆரோக்கியமான உணவுகள் என்றால் உடல் எடையை பராமரித்து வர முடியும் என்பதை மறவாதீர்கள்.