32.1 C
Chennai
Sunday, Jun 30, 2024
hair3
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வு காரணங்கள்… தீர்வுகள்?

மு டி உதிர்வு… இது, எல்லா வயதினருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்னை. பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கங்கள், முறையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் புவி வெப்பமயமாதலும் முடி உதிர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. புவி வெப்பமயமாதலால் நமது உடல் எளிதாக உஷ்ணமடைவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முடிதான்.

hair3

உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் முடி உதிர்வை உணவுப் பழக்கங்கள் மற்றும் பிற பழக்கவழக்கங்களால் சமாளிக்கலாம்.

காலையில் நீண்டநேரம் படுக்கையில் படுத்திருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். சூரியன் உதிப்பதற்குள் கண்விழிப்பது உடலில் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். அதே நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

இன்றைய இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்த்து பெரும்பாலும் ஜெல்களையே பயன்படுத்துகின்றனர்.

அப்படித் தலைக்குப் பூசும் ஜெல்களில் இருக்கும் ரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகிறது. செயற்கை எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கச் செய்யும். செயற்கை எண்ணெய்கள் தலையில் இருக்கும் மயிர்க்கால்களை வறண்டுபோகச் செய்துவிடும். ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவை தலையில் உள்ள செல்களை அழிப்பதுடன் முடி உதிர்வையும் ஏற்படுத்திவிடும்.

பெண்கள் தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்குள் தலைமுடியைப் பின்னிக்கொண்டு ஈரத்துடன் இருப்பதும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது. நாம் பயன்படுத்தும் சீப்புக்கும் இதில் பெரும்பங்கு உண்டு. பொதுவாக பிளாஸ்டிக் சீப்பையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் சீப்பால் தலையில் அழுத்தம் கொடுக்கும்போது மயிர்க்கால்கள் வறண்டு, உஷ்ணமாகி முடி உதிர்வு ஏற்படுகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு, அதிக நேரம் கணினியில் வேலைசெய்வதால் உண்டாகும் வெப்பம் போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும். ‘

இன்றைக்குத் தரமில்லாத உணவுகளும், ரசாயன நச்சுகள் கலந்த உணவுகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. துரித உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகளால் உடலில் உள்ள நல்ல சத்துகளையும் உடல் கிரகிக்க முடியாமல் போகிறது. அந்த உணவுகளில் போதுமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இல்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. இதுதவிர, தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு மற்றும் கருப்பை பிரச்னைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளும் இதற்குக் காரணமாகிறது.

ஆனாலும் முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிகள் உள்ளன. ரசாயனக் கலப்பில்லாத உணவுகள் உட்கொள்வது உடலில் சத்துகள் பற்றாக்குறையைச் சீராக்குவதுடன் ஹார்மோன் சுரப்பையும் சீராக்கும். உணவில் இந்துப்பு பயன்படுத்துவதால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், தைராய்டு குறைபாடுகள் சீராகும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை வாரத்துக்கு நான்கு முறை உட்கொண்டால் கருப்பை ஆரோக்கியமடைவதுடன், முடி உதிர்வும் குறையும்.

யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை தலைக்குத் தேய்ப்பது, வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுவதுடன் மயிர்க்கால்களுக்குத் தேவையான சத்துகளும் எளிதாகக் கிடைக்கும். இதனால் முடி உதிர்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் உற்பத்தியாகி முடி உதிர்தல் குறையும்.

தலைமுடிக்கு ஷாம்பு, கண்டிஷனர் போடுவதற்குப் பதிலாக கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த சீயக்காயைப் பயன்படுத்துவது நல்லது. தலைக்கு ரசாயனங்கள் நிறைந்த வர்ணங்கள் பூசுவதைத் தவிர்க்கவேண்டும். `ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்’ எனப்படும் முடி அமைப்பை மாற்றும் பல நவீன சிகிச்சைகள் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது என்பதால், அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் நீர் அருந்திவிட்டு, இளஞ்சூடான வெயிலில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, முடி உதிர்வுக்கும் தீர்வாக அமையும். முடி வளர்ச்சியும் மேம்படும். பிளாஸ்டிக் சீப்புகளைப் பயன்படுத்தாமல் மரத்தாலான சீப்புகளைப் பயன்படுத்துவது தலையில் இருக்கும் எண்ணெய்ப் பசை அனைத்து இடங்களிலும் சீராகப் பரவி உஷ்ணம் கட்டுக்குள் இருக்கும். இதனால் முடி உதிர்வை பெருமளவில் குறைக்கலாம். ஆரோக்கியமான கூந்தலுக்கும் இது வழிவகுக்கும்.

எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்ண விரும்புபவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணெய்யில் தயாரித்த உணவுகளை உண்பது சிறந்தது. கடைகளில் கிடைக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். இத்தகைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் அழகை அதிகரிக்கலாம்.

Related posts

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ‘ஷாம்பு’ பயன்படுத்தலாம்

nathan

முடி உதிர்வை தடுக்கவும், அடர்த்தியாகவும் இருக்க டிப்ஸ் !!

nathan

To prevent hair fall – முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்..!

nathan

கூந்தல்‬ சீவும் முறை

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

nathan

கூந்தல் வளத்துக்கு கடுகு எண்ணெய்

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்

nathan

Beauty tips.. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருத்துவக் குணங்கள் நிறைந்த செம்பருத்திப்பூ…!!

nathan