24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
vajakara
ஆரோக்கியம் குறிப்புகள்

இயற்கை அள்ளிக்கொடுத்திருக்கும் வயாகரா மாத்திரை…..

நவீன வாழ்க்கை வாழ்வதற்கு நிம்மதியைக் கொடுத்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சுகமே இல்லாமல். வீட்டுக்கு பத்து பிள்ளைகள் இருந்த காலமெல்லாம் கடந்துவிட்டு ஒற்றை பிள்ளைக்கு குழந்தைப்பேறை உண்டாக்குகிறோம் என்னும் மருத்துவமனையில் கால் கடக்க தவம் புரிந்துகொண்டிருக்கிறோம்.

vajakara

வேகமாக செல்லும்காலத்துக்கேற்ப வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றங்களால் மன அழுத்தம், உளைச்சல் என்பதெல்லாம் சகஜமாக வயது பேதமின்றி காணப்படுகிறது. வேலை, பொருளாதாரம், பணிச்சுமை என்று அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சில ஆண்கள் மாறிவரும் இத்தகைய பழக்கங்களால் தங்கள் ஆண்மை குறைவால் அவதியுறுகிறார்கள்.

ஆண்மை இழப்பை ஈடு செய்யவும் பாலியல் உணர்ச்சியைத் தூண்டவும் மார்க்கெட்டில் விற்கப்படும் மாத்திரைகளைத்தான் நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் இவையெல்லாம் ஆண்மை இழப்பை ஈடுசெய்வதில்லை மாறாக மேலும் மன அழுத்தத்தையும், அதனால் நோயையும் உண்டாக்கிவிடுகிறது என்பதே உண்மை. வயாகரா மாத்திரை நன்றாக வேலை செய்யுமா என்று பார்க்கும் ஆண்கள் அது தரமான வயாகரா மாத்திரையா என்பதை கவனிப்பதில்லை.

இயற்கை அள்ளிக்கொடுத்திருக்கும் வயாகரா மாத்திரைகள் இருக்கும் போது கேடு தரும் மாத்திரைகள் எதற்கு? ஆண்மை குறைவு பிரச்னைகள் இப்போது மட்டுமல்ல நமது முன்னோர்கள் காலத்திலேயே இருந்துவந்தது. அவர்கள் இயற்கையில் இருக்கும் பொருள்களை கொண்டே ஆண்மை சக்தியை அதிகரித்து கொண்டார்கள். இழப்பை ஈடு செய்து கொண்டார்கள். ஒன்றல்ல… இரண் டல்ல… அரை டஜன், ஒரு டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். நாமும் அவர்கள் வழியை தொடரலாம்.

சோற்றுக்கற்றாழையின் மடலை சீவி நுங்குப்பகுதியை எடுத்து மிக்ஸியில் அரைத்து இளநீரில் கலந்து நாட்டுச்சர்க்கரை சேர்த்துகுடித்து வந்தால் நாளடைவில் ஆண்மை வலுபெறுவதை கண் கூடாக உணர்வீர்கள்.

கற்றாழை வேர்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பானையில் தண்ணீருக்குப் பதிலாக பசும்பால்விட்டு ஆவியில் வேக வைக்கவும். பிறகு நிழலில் உலர்த்தி நன்றாகப்பொடியாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் தூளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை வலுவாகும். ஆண்மைக்குறைபாடு பிரச்னைகள் தீரும். விந்தணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஜாதிக்காய் தாம்பத்ய வாழ்க்கைக் குறைபாடின்றி இனிமையாக கழிய உதவுகிறது. ஒருவித போதையை ஏற்படுத்தி பாலூணர்வைத் தூண்டும் வல்லமை ஜாதிக்காய்க்கு உண்டு. ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதிக் காயை உடைத்து வாணலியில் இலேசாக நெய்விட்டு வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் காலையில் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.

விந்துக்களில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். ஆண்மை குறைவைப் போக்கும். விந்து முந்துதலைத் தடுக்கும். ஆண்மைக் குறைபாடால் ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கவல்லது ஜாதிக்காய். சித்தமருத்துவத்தில் நரம்புத்தளர்ச்சி மற்றும் ஆண்மைக்குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கதிகமாக சாப்பிடக்கூடாது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் பக்கவிளைவுகள் இல்லாத வயாகரா மாத்திரைகள் என்கிறார்கள் முன்னோர்கள். பெரியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்பது உண்மைதான்.

Related posts

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

இதனால் மன அழுத்தம் ஏற்படுமா?தீர்வுகள் என்னென்ன?

nathan

உங்க உடல் முழுவதும் வியர்வை நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

உங்க குழந்தை புத்திசாலியா பிறக்கனுமா? இந்த ஒரு விஷயத்த செஞ்சாலே போதும்!

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

தெரிஞ்சிக்கங்க…இரவு உணவின் போது குழந்தைகளிடன் கேட்க வேண்டிய கேள்விகள்!

nathan

படியுங்கள்! குக்கரில் சமைத்த உணவுகளை நாம் சாப்பிடுவது நல்லதா?

nathan

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

nathan

வீட்டு வைத்தியம்: அல்சர் (ulcer) நோயால் தினமும் அல்லல்படுபவர்களுக்கு இந்த இயற்கை வைத்தியம்

nathan