25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
face4
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும். இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் தோன்றுவதினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

face4

இரண்டு லிட்டர் நீரினில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு, 10 வேப்ப இலைகள், இட்டு நன்றாக ஆவி வருமளவு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்க வைத்த நீரினை கொண்டு சற்றும் தாமதிக்காமல் ஆவி பிடிக்க வேண்டும்.

இது போல 20 நிமிடங்களுக்கு குறையாமல் ஆவி பிடிக்க வேண்டும். இதில் உள்ள வேம்பு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும், புதிய செல்களை தோற்றுவிக்கிறது. நாம் முகத்தில் தினமும் உபயோகிக்கின்ற க்ரீம் மற்றும் பவுடர் பூச்சுகளினால் சருமத்தில் உள்ள சுவாசிக்கும் துளைகளை அடைத்து விடுகின்றன. இதுவே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும்.

இவ்வாறு, ஆவி பிடிக்கும் பொழுது அந்த துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுவாசிக்க தொடங்குவதனால் புத்துணர்வுடன் காணப்படுகின்றது. வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆவிபிடித்தலை செய்யும் பொழுது சருமம் புது பொலிவுடன் இருக்கும்.

இந்த எலுமிச்சை முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும்.
ஆவி பிடித்தவுடன் முகத்தை காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்த பின் பால் அல்லது சுத்தமான தயிர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம், இது முகத்திற்கு புரோட்டின் சத்தினை கொடுக்கின்றது. அதிக படியான பொலிவினை பெற உதவுகிறது.

குறிப்பு: ஜலதோஷம் அல்லது குளிர்ந்த உடலை கொண்டுள்ளவர்கள் இதனுடன் துளசி இல்லை அல்லது தூதுவளையை சேர்த்து கொள்ளலாம்.

Related posts

தரையிறக்கத்தின் போது இரண்டாக பிளந்த விமானம் -நீங்களே பாருங்க.!

nathan

விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் ரூ.1,001 பரிசு அறிவித்த அர்ஜுன் சம்பத்

nathan

இதோ உங்க கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீரக அழகைப் பெற உதவும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

முகப் பொலிவுக்கு உதவும் நைட் க்ரீம்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா ரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்!

nathan

கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்..

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan